14 April 2008

Daanger Maavu Pachchadi -- Meenakshi Ammal

 Daangar Maavu Pacchadi


டாங்கர் மாவு பச்சடியில் இரண்டு வகை உண்டு. முதலாவது “பச்சை” (raw) மாவு; இரண்டாவது வறுத்த மாவு.

பச்சை டாங்கர் பச்சடி:

2 டீஸ்பூன் உளுத்த மாவை, 1/2 கப் கெட்டியான புளித்த மோரில் போட்டு, 1/4 டீஸ்பூன் உப்பு, 2 சிமிட்டாக்கள் சீரகம், இரண்டு பச்சை மிளகாய் (கிள்ளிக் கொள்ளவும்) இவற்றைப் போட்டு, பெருங்காயத்தை கரைத்துவிட்டு, பச்சை கொத்துமல்லி, கறிவேப்பிலை இவற்றை கிள்ளிப் போட்டு, 1/2 டீஸ்பூன் கடுகு தாளிக்கவும்.

2. வறுத்த மாவு டாங்கர் பச்சடி

இதற்கு சீரகம் வேண்டாம். பாக்கி மேலே சொல்லியபடி (வறுத்து அரைத்த உளுத்த மாவைப் போட்டு) செய்யவும்.

மீனாட்சி அம்மாள் “சமைத்துப் பார்” பகுதி 1 பக்கம் 91

கீழே இன்னொரு பச்சடிக்கான செய்முறை (மீண்டும் மீனாட்சி அம்மாள் தயவுடன்)

நேத்துக் கொட்டு மாவு பச்சடி

சம அளவுக்குக் கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, கோதுமை, இவைகளைப் போட்டு, அதற்குத் தகுந்தபடி மிளகு, மஞ்சள் இவற்றையும் போட்டு, இளவறுப்பாக வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

2 டீஸ்பூன்கள் மாவுக்கு, 1/2 கப் தயிரில் (அல்லது கெட்டியான சற்று புளித்த மோரில்) 1/4 டீஸ்பூன் உப்பை போட்டு கரைத்து, கொத்தமல்லியை கிள்ளிபோட்டு, 1/4 டீஸ்பூன் கடுகு, 1 பச்சை மிளகாய் தாளிக்கவும்.

குறிப்பு: மிளகுக்கு பதிலாக 1 டீஸ்பூன் வெந்தயத்தை வறுத்து போடலாம். மற்ற பருப்புகளுடன் பாசிப் பருப்பையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ராஜப்பா
14-4-2008
7-15PM

No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...