Showing posts with label Garlic Ginger. Show all posts
Showing posts with label Garlic Ginger. Show all posts

04 December 2017

VAZHAI POO VADAI

வாழைப்பூ வடை
(by SUBHA MAGESH, sent on 19-09-2010)

Ingredients:

Banana flower- 1
Coriander leaves- 3 stks
Mint-10 leaves
buttermilk- 2 tbsp
Salt
oil- for frying

To grind:

Channa dhal- 1/2 cup
Toor dhal- 3/4 cup
Red chilies-3
Whole pepper-1 tsp
Jeera- 1 tbsp
Ginger- 1inch piece
Garlic-3 cloves

Method:

Dilute the 2 tbsp of buttermilk in 2 cups of water and keep it aside.
Peel the purple cover of the flower and pull out the flower bunches of each layer.
Next, remove the stamens of each florets and chop them into fine pieces.
Put the chopped flowers in buttermilk water along with pinch of turmeric.
Soak all the above said ingredients for about an hour and grind it coarsely.
Drain the excess water from the chopped flowers and add it to the mixture.
Chop the cilantro and mint and add it to the mixture.
Make vadas and deep fry it.
Serve it hot with chutney.



குறிப்பு: வாழைப்பூ வடை மயிலாப்பூர் கிழக்கு மாட வீதியில் உள்ள கற்பகாம்பாள் ஹோட்டலிலும் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸின் “ரஸம்” ஹோட்டல்களிலும் விசேஷம்.

வாழைப்பூ குழம்பு, வாழைப்பூ மசியல் வாழைப்பூ புட்டுக் கறி என இன்னும் சில வகைகள் இருப்பதாக அறிகிறேன்; இவற்றை நம் குடும்பத்தில் யார் செய்தும் பார்த்ததில்லை; கேட்டதுமில்லை.


rajappa
19-09-2010

01 October 2017

Vegetable Kuruma

VEGETABLE KURUMA (19-05-2018)

உருளைக்கிழங்கு  - 2
வெங்காயம் - 1
காரட் -1
காலிஃப்ளவர் - கொஞ்சம்
பீட்ரூட் - கொஞ்சம்
பூண்டு - 10 பல்
பூண்டு இஞ்சி விழுது
பச்சை மிளகாய் 3
இஞ்சி 1”
கிராம்பு, ஏலக்காய், பட்டை, இலை
மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, தனியா பொடி, கரம் மசாலா பொடி
சோம்பு, தேங்காய் துருவியது, முந்திரி இவற்றை தண்ணீரில் ஊற வைக்கவும்.
எண்ணெய்.



எல்லா காய்களையும் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடிசாக நறுக்கி கொள்ளவும்.
பூண்டை உரித்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, சிறிது உப்பு போட்டு காய்களை வேக விடவும் (10 - 12 நிமிஷங்கள் ஆகலாம்)
வெந்த காய்களை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.
அதே கடாயில் சிறித் எண்ணெய் விட்டு, சூடானதும், கிராம்பு, ஏலக்காய், பட்டை, இலை ஆகியவற்றை போடவும்.
அடுத்து வெங்காயம் போட்டு 4 நிமிஷம் வதக்கவும்.
பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கவும்.
பூண்டு இஞ்சி விழுது போட்டு வதக்கவும்.
மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, தனியா பொடி, கரம் மசாலா போடவும்.
தண்ணீர் விட்டு 10 நிமிஷம் கொதிக்க விடவும்.
தேங்காய், முந்திரி, சோம்பு விழுதை போட்டு, நன்றாக கலக்கவும்.
1 நிமிஷம் கழித்து அடுப்பை அணைக்கலாம்.
குருமா ரெடி.



I prepared this KURUMA on 19-5-2018.

19-05-2018

15 September 2017

Salna

சால்னா

டேபிள் 1.

எண்ணெய் 2 டீஸ்பூன்,  இஞ்சி நறுக்கியது 1 டேஸ்பூன்,  பூண்டு  4 பல்
ஜீரகம்  1 டீஸ்பூன்,  சோம்பு 1 டீஸ்பூன்,  சிகப்பு மிளகாய்  2,
பச்சை மிளகாய்  1, தனியா (whole) 1 டீஸ்பூன், பொட்டுக் கடலை 2 டேஸ்பூன், கிராம்பு  2,  பட்டை கொஞ்சம்,  உப்பு, ஏலக்காய்  2,  
தேங்காய் துருவியது 3 டேஸ்பூன்,  வெங்காயம் நறுக்கியது 1 மீடியம்
தக்காளி நறுக்கியது  1 மீடியம்.

டேபிள் 2.

எண்ணெய் 2 டீஸ்பூன்,  கடுகு 1/4 டீஸ்பூன்,  வெங்காயம் நறுக்கியது 1 மீடியம், தக்காளி நறுக்கியது  1 மீடியம்,  வேக வைத்த காய்கறிகள் 1/2 கப், [காரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், காலிஃபிளவர்,  பச்சைப் பட்டாணி], கொத்தமல்லி தழை, புதினா தழை

செய்முறை

  • வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும், ஜீரகம், சோம்பு, சிகப்பு மிளகாய் கிள்ளியது, தனியா whole,  ஏலக்காய், பட்டை, கிராம்பு, சேர்த்து 2 நிமிஷம் வதக்கவும். பின்னர், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி சேர்த்து வதக்கவும். அடுப்பை அணைத்து, தேங்காய், பொட்டுக் கடலை சேர்த்து mix பண்ணி ஆறவிடவும். ஆறியதும், மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீருடன்  விழுதாக அரைக்கவும்.
  • டேபிள் 2-ல் உள்ள எண்ணெயை வாணலியில் ஊற்றி, சூடானவுடன், கடுகு போட்டு, வெடித்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி சேர்த்து வதக்கவும். வேகவிட்ட காய்கறிகளை போட்டு வதக்கவும்.
  • அரைத்த விழுதை போடவும். தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். 5-10 நிமிஷங்கள் கொதிக்கட்டும்.
  • உப்பு, கொத்தமல்லி தழை, புதினா தழை போடவும். ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
  • புரோட்டா, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள மிகவும் ருசியாக இருக்கும்.


ராஜப்பா
18-05-2013
மாலை 7 மணி

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...