01 August 2009

Samaradhanai Samaiyal

நம் வீடுகளில் (13ஆம் நாள் சுபஸ்யம்) க்ரேக்கியத்தன்றோ அல்லது சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு மறுநாள் செய்யும் ஸ்வாமி சமாராதனையன்று செய்யும் சமையலை இப்போது பார்ப்போம்.

["சமைத்துப் பார்” - எஸ். மீனாக்ஷி அம்மாள் எழுதியது - பாகம் 3, பக்கம் 270-ல் மிக விவரமாக் எழுதப்பட்டுள்ளது]

சோதகும்பத்திற்கும் இதே சமையல்தான்; சில சமயங்களில் சாஸ்திரிகள் சோதகும்பத்திற்கு ஸ்ராத்த சமையல் பண்ணச் சொல்லுவார். எனவே, சோதகும்பத்திற்கென்று தனி சமையல் கிடையாது - ஒன்று, ஸ்ராத்த சமையல் அல்லது சமாராதனை சமையல். இதை மனதில் கொள்ளவும்.

சமாராதனைக்கு மாவிளக்கு போடவேண்டும்.

தேவையான பொருட்கள்: 30 பேருக்கு

மஞ்சள் பொடி – 50 கி
அரிசி – 5 கிலோ
துவரம் பருப்பு – 1 1/2 கிலோ
கடலைப்பருப்பு - 1 கிலோ
உளுத்தம் பருப்பு – 3/4 கிலோ
பயத்தம்பருப்பு – 1/2 கிலோ
மிளகாய் வத்தல் – 1/4 கிலோ
தனியா – 1/4 கிலோ
புளி – 1/4 கிலோ
வெல்லம் - 1 கிலோ
நல்லெண்ணெய் – 1/2 கிலோ
ரீஃபைண்ட் எண்ணெய் – 1 கிலோ (சமையல் எண்ணெய்)
தேங்காய் எண்ணெய் – 1/4 கிலோ
கடுகு – 50 கி
மிளகு – 50 கி
சீரகம் – 50 கி
வெந்தயம் – 50 கி
மிளகாய்த்தூள் – 50 கி
சாதா உப்பு – 1 கிலோ
சர்க்கரை - 1 1/2 கிலோ
காஃபி பவுடர் – 1/2 கிலோ (தேவையைப் பொறுத்தது)
வெண்ணெய் - 3/4 கிலோ
பால் - தோய்ப்பதற்கு - 3 லிட்டர்
பால் - காஃபி, டீ - 5 லி

கறிகாய்கள்

வெள்ளரிக்காய் – 1/4 கிலோ -  பச்சடி
வாழைக்காய் – 1    (வாழைக்காய் முதல் முருங்கை வரை அவியலுக்கு)
பூசணிக் காய் – 1/4 கிலோ
சேனைக்கிழங்கு – 1/2 கிலோ
காரட் – 1/2 கிலோ
பச்சைப்பட்டாணி – 1/2 கிலோ
முருங்கைக்காய் – 4

உருளைக்கிழங்கு – 3 கிலோ (கார கறிக்கு)
பீன்ஸ் – 1 கிலோ (தேங்காய் கறி)

குடைமிளகாய் – 1/2 கிலோ  (சாம்பார்)
தக்காளி – 3/4 கிலோ  (ரசம்)
தேங்காய் – 4
பச்சை மிளகாய் – 100 கிராம்
இஞ்சி – 100 கிராம்
கருவேப்பிலை, கொத்துமல்லி

வாழையிலை – நுனி இலை 30

சமாராதனை சமையல்

சர்க்கரைப் பொங்கல்
பயத்தம் பருப்பு கோசுமல்லி
தித்திப்பு பச்சடி
தயிர் பச்சடி (வெள்ளரிக்காய்)
பருப்பு
நெய்
கலந்த சாதம் (தேங்காய் சாதம், எலுமிச்சம்பழ சாதம், புளியஞ்சாதம் இவற்றில் ஏதாவது ஒன்று)
ஆம வடை
பீன்ஸ் தேங்காய் கறி
உருளைக் கார கறி
அவியல்
புளி இஞ்சி (அல்லது மாங்காய் / எலுமிச்சை ஊறுகாய்)
குடைமிளகாய் சாம்பார்
தக்காளி ரசம்
தயிர்

ராஜப்பா
22-01-2010
பகல் 12:05

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...