வாழைத்தண்டு நார்ச் சத்து நிறைந்த, பல மருத்துவ குணங்களைக் கொண்டது. இது ரத்தத்தை தூய்மைப்படுத்தும் குணம் கொண்டது. ரத்தக் கொழுப்பை குறைக்கும் வாரத்திற்கு இரண்டு முறையாவது வாழைத்தண்டை சமைத்து சாப்பிட வேண்டும்.
சிறுநீரக கற்கள் (KIDNEY STONES) கரைக்க / வெளியேற்ற வாழைத்தண்டு மிக நல்லது. தண்டின் சாறை தினமும் குடித்து வர, பல குடல்-ச்ம்மந்தப் ப்ட்ட நோய்கள் குணமாகும்.
வாழைத்தண்டு கறி
வாழைத்தண்டை நார் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, கொஞ்சம் மோர் சேர்த்த நீரில் போடவும். மோர் சேர்த்தால் வாழை கறுக்காமல் இருக்கும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, வரமிளகாய் (கிள்ளிப் போட்டது) -- தேவையானால் உளுத்தம்பருப்பையும் போடலாம் --ஆகியவற்றை தாளித்து, தண்டை அலம்பி இதில் போடவும்.
ஒரு கைப்பிடி பயத்தம்பருப்பை இதன் மேல் போடவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
தண்ணீர் தெளித்து வேக விடவும்.
வெந்ததும் அடுப்பை அணைக்கவும்
வாழைத்தண்டு கறி ரெடி. வேண்டுமானால் தேங்காய் துருவி சேர்த்துக் கொள்ளலாம்.
வாழைத்தண்டு கூட்டு
வாழைத்தண்டு கோசுமல்லி.
வாழைத்தண்டை நாரில்லாமல் சிறு துண்டங்களாக நறுக்கி, மோர் விட்ட தண்ணீரில் போடவும். பின்னர் நன்றாக அலம்பி, 1 டீஸ்பூன் உப்பு, 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து பிசிறவும்.
சற்று நேரம் கழித்து (MARINATE), ஒட்டப் பிழிந்து கொள்ளவும்.
இதில், ஒரு எலுமிச்சம் பழத்தின் சாற்றை பிழியவும்.
சிறிது கருவேப்பிலையை கிள்ளிப் போடவும்.
சிறிது பெருங்காயத்தை கரைத்து ஊற்றவும்.
2 டீஸ்பூன்கள் எண்ணெயில், கடுகு, 2 பச்சை மிளகாய்கள் தாளித்துக் கொட்டவும்.
No comments:
Post a Comment