25 January 2012

Carrot Halwa [Gajar ka Halwa]

நேற்று (24-01-2012) காலை மார்க்கெட்டில் காரட்கள் (GAJAR) தளதளவென்று பிஞ்சாக, இளசாக, “வாங்குங்கள், வாங்குங்கள்” எனக் கூவி கூவி அழைத்தன.
GAJAR
விலையும் பரவாயில்லை (கிலோ 40.00). Temptation தாங்கமாட்டாமல் உடனே 1/2 கிலோ வாங்கிவிட்டேன்.

வீட்டில் காரட்டுகளை நன்றாக அலம்பி, தோல் சீவினோம். மீண்டும் இன்னொரு முறை அலம்பிவிட்டு, துருவ ஆரம்பித்தோம். காரட் துருவல் ஒரு கடினமான காரியம் !

துருவிக் கொண்டிருக்கும் போதே, ஒரு வாயகன்ற பாத்திரத்தில் 2 டம்ளர் பாலை கொதிக்க விட்டோம். ஒரு பாத்திரத்தில் துருவிய காரட்டை  போட்டு, ஒரு டம்ளர் பால் சேர்த்து, குக்கரில் வைத்து வேக விட்டோம். 3 விஸில் வந்ததும், குக்கரை அணைக்கவும். குக்கர் ஆறட்டும்.

பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் பால் பாதியாக சுண்டும் வரை கொதிக்க வேண்டும் (சுமார் 1/2 மணி நேரம் பொறுமை தேவை).

ஒரு கடாயில் காரட் துருவலை போட்டு, சுண்டிய பாலை அதில் விட்டு, 1/2 கிலோ சர்க்கரை சேர்த்து கிளறவும். 

சுமார் 20 நிமிஷங்கள் கிளறி, காரட் ஹல்வா பதத்திற்கு வந்ததும், 3 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு, நன்கு கிளறவும்.

[தேவையானால், 10 முந்திரி, 6 கிஸ்மிஸ் (உலர்ந்த திராக்ஷை), 4 பாதாம், கொஞ்சம் ஏலக்காய் பொடி இவற்றை நெய்யில் வறுத்து ஹல்வாவில் சேர்க்கலாம் பிஸ்தா பருப்புகளை நெய்யில் வறுக்கக் கூடாது; அப்படியே போடவும். நாங்கள் மேற்சொன்ன எதையும் போடவில்லை.]

ஹல்வா ரெடி.


பண்ணிய சில நிமிஷங்களிலேயே ஹல்வா 3/4 வாசி காலி ! [நான் ஒரு துளி கூட சாப்பிடவில்லை. அதிதி ரசித்து சாப்பிட்டதை பார்த்தே என் மனம் நிரம்பியது; வயிறும் கூட]

ராஜப்பா
10:40 காலை
25 ஜனவரி 2012














DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...