GAJAR
விலையும் பரவாயில்லை (கிலோ 40.00). Temptation தாங்கமாட்டாமல் உடனே 1/2 கிலோ வாங்கிவிட்டேன்.
வீட்டில் காரட்டுகளை நன்றாக அலம்பி, தோல் சீவினோம். மீண்டும் இன்னொரு முறை அலம்பிவிட்டு, துருவ ஆரம்பித்தோம். காரட் துருவல் ஒரு கடினமான காரியம் !
துருவிக் கொண்டிருக்கும் போதே, ஒரு வாயகன்ற பாத்திரத்தில் 2 டம்ளர் பாலை கொதிக்க விட்டோம். ஒரு பாத்திரத்தில் துருவிய காரட்டை போட்டு, ஒரு டம்ளர் பால் சேர்த்து, குக்கரில் வைத்து வேக விட்டோம். 3 விஸில் வந்ததும், குக்கரை அணைக்கவும். குக்கர் ஆறட்டும்.
பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் பால் பாதியாக சுண்டும் வரை கொதிக்க வேண்டும் (சுமார் 1/2 மணி நேரம் பொறுமை தேவை).
ஒரு கடாயில் காரட் துருவலை போட்டு, சுண்டிய பாலை அதில் விட்டு, 1/2 கிலோ சர்க்கரை சேர்த்து கிளறவும்.
சுமார் 20 நிமிஷங்கள் கிளறி, காரட் ஹல்வா பதத்திற்கு வந்ததும், 3 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு, நன்கு கிளறவும்.
[தேவையானால், 10 முந்திரி, 6 கிஸ்மிஸ் (உலர்ந்த திராக்ஷை), 4 பாதாம், கொஞ்சம் ஏலக்காய் பொடி இவற்றை நெய்யில் வறுத்து ஹல்வாவில் சேர்க்கலாம் பிஸ்தா பருப்புகளை நெய்யில் வறுக்கக் கூடாது; அப்படியே போடவும். நாங்கள் மேற்சொன்ன எதையும் போடவில்லை.]
ஹல்வா ரெடி.
பண்ணிய சில நிமிஷங்களிலேயே ஹல்வா 3/4 வாசி காலி ! [நான் ஒரு துளி கூட சாப்பிடவில்லை. அதிதி ரசித்து சாப்பிட்டதை பார்த்தே என் மனம் நிரம்பியது; வயிறும் கூட]
ராஜப்பா
10:40 காலை
25 ஜனவரி 2012
Nice. Your description makes me to go to Veg. Market even though we are prohibited from taking Sweet items. But we take this regularly in the raw form in Salads and Soups.
ReplyDeleteS.Sundaresan , Pune now at Thane 25thJan'12
Thanks, Sundaresan. I guess the carrots used for salad and soup are different from carrots used for making Halwa. For Halwa, GAJAR is preferred.
DeleteI too do not eat sweets as per doctor's advice. However, the latest research and studies say that one can eat sweets - on a very moderate level.
Very nice and healthy food.
ReplyDelete