டேபிள் 1.
எண்ணெய் 2 டீஸ்பூன், இஞ்சி நறுக்கியது 1 டேஸ்பூன், பூண்டு 4 பல்
ஜீரகம் 1 டீஸ்பூன், சோம்பு 1 டீஸ்பூன், சிகப்பு மிளகாய் 2,
பச்சை மிளகாய் 1, தனியா (whole) 1 டீஸ்பூன், பொட்டுக் கடலை 2 டேஸ்பூன், கிராம்பு 2, பட்டை கொஞ்சம், உப்பு, ஏலக்காய் 2,
தேங்காய் துருவியது 3 டேஸ்பூன், வெங்காயம் நறுக்கியது 1 மீடியம்
தக்காளி நறுக்கியது 1 மீடியம்.
டேபிள் 2.
எண்ணெய் 2 டீஸ்பூன், கடுகு 1/4 டீஸ்பூன், வெங்காயம் நறுக்கியது 1 மீடியம், தக்காளி நறுக்கியது 1 மீடியம், வேக வைத்த காய்கறிகள் 1/2 கப், [காரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், காலிஃபிளவர், பச்சைப் பட்டாணி], கொத்தமல்லி தழை, புதினா தழை
செய்முறை
- வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும், ஜீரகம், சோம்பு, சிகப்பு மிளகாய் கிள்ளியது, தனியா whole, ஏலக்காய், பட்டை, கிராம்பு, சேர்த்து 2 நிமிஷம் வதக்கவும். பின்னர், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- தக்காளி சேர்த்து வதக்கவும். அடுப்பை அணைத்து, தேங்காய், பொட்டுக் கடலை சேர்த்து mix பண்ணி ஆறவிடவும். ஆறியதும், மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீருடன் விழுதாக அரைக்கவும்.
- டேபிள் 2-ல் உள்ள எண்ணெயை வாணலியில் ஊற்றி, சூடானவுடன், கடுகு போட்டு, வெடித்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- தக்காளி சேர்த்து வதக்கவும். வேகவிட்ட காய்கறிகளை போட்டு வதக்கவும்.
- அரைத்த விழுதை போடவும். தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். 5-10 நிமிஷங்கள் கொதிக்கட்டும்.
- உப்பு, கொத்தமல்லி தழை, புதினா தழை போடவும். ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
- புரோட்டா, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள மிகவும் ருசியாக இருக்கும்.
ராஜப்பா
18-05-2013
மாலை 7 மணி
No comments:
Post a Comment