கடப்பா
தேவையான பொருட்கள்
பயத்தம்பருப்பு 200 கிராம்
பட்டை – 2 துண்டுகள்
இலவங்கம் – 3
பெரிய வெங்காயம் – 300 கிராம்
உருளைக்கிழங்கு 300 கிராம்
பொட்டுக்கடலை 50 கிராம்
கசகசா 20 கி
பசசை மிளகாய் – 10
கொத்தமல்லி தழை – சிறிது
தேங்காய் – 1/2 மூடி
பூண்டு – 8 பல்
உப்பு
செய்முறை
ப.பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, உதிர்த்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
பொட்டுக்கடலை, தேங்காய்த் துருவல், 4 பல் பூண்டு, கசகசா, பச்சைமிளகாய் இவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் 4 பல் பூண்டு போட்டு சிவந்ததும், பட்டை, இலவங்கம் போட்டு வெடிக்க விடவும்.
நறுக்கிய வெங்காயம் போட்டு சிவக்க வறுக்கவும்.
இதனுடன், வேகவைத்த ப பருப்பு, இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் போட்டு கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய், பொட்டுக்கடலை விழுதை கலந்து கொதிக்க விடவும்.
இறக்கி வைத்த சூட்டுடன் 1/2 மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து, கொத்தமல்லி தழை தூவவும்.
ராஜப்பா
20:00 on 03-11-2009
Subscribe to:
Post Comments (Atom)
DAHI BHINDI
DAHI BHINDI Ingredients ...
-
நம் வீடுகளில் (13ஆம் நாள் சுபஸ்யம்) க்ரேக்கியத்தன்றோ அல்லது சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு மறுநாள் செய்யும் ஸ்வாமி சமாராதனையன்று செய்யும் சமையலை...
-
நம் வீடுகளில் செய்யும் சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு பண்ண வேண்டிய சமையலை விவரமாக காண்போம். 5 சுமங்கலிகளையும், 1 கன்யாப் பெண்ணையும் அழைக்க வேண...
-
அது மாகாளியா, அல்லது மாகாணியா? பெயர் என்னவாயிருந்தால் என்ன, அது மலைப்பிரதேசங்களில் விளையும் ஒரு மரத்தின் வேர். கூகிளில் தேடியபோது, இந்தக் ...
No comments:
Post a Comment