மருத்துவ விசேஷங்கள்:
பீர்க்கங்காயில் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் அறவே கிடையாது. நார்சசத்து, விட்டமின் C, Riboflavin, Zinc, thiamin, iron, magnesium, manganese சத்துக்கள் நிரம்பியது. குளிர்ச்சியானது.
இனி சில பீர்க்கங்காய் சமையல்களை பார்ப்போமா?
முதலில், பீர்க்கங்காய் கூட்டு
பீர்க்கங்காயை நன்கு அல்ம்பி, லேசாக தோல் சீவிக் கொள்ளவும்.
சதுரங்களாக CUBES நறுக்கிக் கொள்ளவும்.
PEERKAN KAI cut for Koottu
குக்கரில் 50 கிராம் பயத்தம்பருப்பு, காய், மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் சாம்பார் மிளகாய் தூள், கொஞ்சம் உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். 3 விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
குக்கர் ஆறியதும் 1/2 டீஸ்பூன் ஜீரகம், சிட்டிகை பெருங்காயம் போட்டு கலக்கவும்.
இன்னொரு சிறிய வாணலியில் கடுகு, 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, 1 வரமிளகாய் தாளிக்கவும்.
22-06-2018 We made this KOOTTU
கூட்டு ரெடி
அடுத்து, பீர்க்கங்காய் துகையல்.
லேசாக தோல் சீவி, காயை நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டு 1 டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 3 வரமிளகாய் இவற்றை சிவக்க வறுக்கவும். வறுத்ததை தனியாக எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு, பீர்க்கங்காயை வதக்கவும்.
வறுத்த உ-பருப்பு, மிளகாயை சிறிது புளி சேர்த்து மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். வதக்கின காயை மிக்சியில் போட்டு, உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும். பீர்க்கங்காயில் தண்ணீர் சத்து நிரம்ப இருப்பதால் தனியாக தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
அடுத்து, பீர்க்கங்காய் புளிக்குழம்பு.
லேசாக தோல் சீவி காயை நறுக்கிக் கொள்ளவும்.
நெல்லிக்காய் அளவு புளியை ஊறவைக்கவும்.
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம், 2 பச்சை மிளகாய் (கீறிக்கொள்ளவும்), தாளிக்கவும்.
காயை இதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
புளியை கரைத்து ஊற்றி, 1 ஸ்பூன் சாம்பார் மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
புளி வாசனை போனதும் 1/2 ஸ்பூன் அரிசி மாவு கரைத்து ஊற்றவும். சிறிது வெல்லம் சேர்க்கவும்.
புளிக்குழம்பு ரெடி.
கடைசியாக, பீர்க்கங்காய் வறுவல்.
காயை தோலுடன் வில்லைகளாக் நறுக்கிக் கொள்ளவும்.
1 டீஸ்பூன் மிளகாய் பொடியுடன், கொஞ்சம் உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கொள்ளவும்.
கலவையை காய் வில்லைகளில் பிசறி வைத்துக் கொள்ளவும்
200 கிராம் எண்ணெயை வாணலியில் ஊற்றி சூடாக்கவும்.
3 டீஸ்பூன் அரிசி மாவை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு, வில்லைகளை இதில் லேசாக பிரட்டிக் கொண்டு, சூடான எண்ணெயில் பொரிக்கவும்.
ராஜப்பா
10:30 காலை
01-03-2010
On 22 June 2018 we made this Kootu
On 22 June 2018 we made this Kootu
No comments:
Post a Comment