01 October 2017

Hotel Kuruma


ஹோட்டல் குருமா.

தேவையானவை:
உருளைக்கிழங்கு மீடியம் சைஸ் 4
பச்சை பட்டாணி, 1 கைப்பிடி (சீஸனாக இருந்தால்)

வெங்காயம், 4, நறுக்கியது
தக்காளிப் பழம், 2 நறுக்கியது
பூண்டு 10-15
இஞ்சி, 1”
பச்சை மிளகாய், 3
தேங்காய் துருவியது, 1/2 கப்
முந்திரி பருப்பு, 6
கிராம்பு, 3
பட்டை
ஏலக்காய், 3
கசகசா 2 டீஸ்பூன்
சோம்பு, 1 டீஸ்பூன்
ப்ரிஞ்சி இலை, 1

மிளகாய்த் தூள், 2 டீஸ்பூன்,
மஞ்சள் பொடி, 1 டீஸ்பூன்
தனியா தூள், 1 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய், 2 டீஸ்பூன்.

செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து, ஆறியவுடன் தோலுரித்துக் கொள்ளவும்.
முந்திரி, கசகசாவை தண்ணீரில் 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறிக் கொண்டிருக்கும் போதே, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்களை நறுக்கிக் கொள்ளவும்.
பூண்டு, இஞ்சி தோல் நீக்கி, நறுக்கிக் கொள்ளவும்.
முந்திரி, கசகசா ஊறியவுடன், இவற்றையும், மற்ற எல்லா சாமான்களையும் (வெங்காயம் முதல் ப்ரிஞ்சி வரை) மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, விழுதை வதக்கவும்.
மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடியை இதில் சேர்த்து வதக்கவும்.
தனியாப் பொடியை சேர்க்கவும்.
வதங்கியதும் தண்ணீர் ஊற்றி கொதிக்கட்டும்.
உப்பு சேர்க்கவும்.
உருளைக்கிழங்கை மசித்து கிழங்கையும் (பச்சைப் பட்டாணியையும்) இதில் போட்டு, வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி, 10 - 15 நிமிஷம் கொதிக்க விடவும்.
தோசை, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும்.

ராஜப்பா
காலை 10 மணி
15-09-2012




No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...