காய்கறிகள் புலவ்
தேவையானவைஅரிசி - 4 கப்
காய்கறிகள்
உருளை -- 4
வெங்காயம் - 2
கத்தரிக்காய் -- 3
வாழைக்காய் -- பாதி
பூசணி -- சிறு பத்தை
பரங்கிக் காய் -- சிறு பத்தை
தக்காளி -- 2
கிராம்பு -- 4
ஏலக்காய் -- 2
பட்டை- 2 செமீ
மிளகாய் பொடி -- 2 டீஸ்பூன்
இஞ்சி -- 5 செமீ
பூண்டு -- 12 பற்கள்
சின்ன வெங்காயம் -- 8
பச்சை மிளகாய் -- 3
எண்ணெய் -- 4 டேபிள்ஸ்பூன்
நெய் --- 3 டேபிள்ஸ்பூன்
உப்பு -- தேவைக்கேற்ப
செய்முறை
அரிசியை
தண்ணீரில் நன்றாக களைந்து, தண்ணீரை இறுத்து
விட்டு, 10 - 12 நிமிஷம் அரிசியை
வைத்துக்கொள்ளவும்.
கிராம்பு,
ஏலக்காய், பட்டை இவைகளை பொடித்துக் கொள்ளவும்.காய்கறிகளை சதுரங்களாக நறுக்கவும்.
கொதிக்கும்
நீரில் தக்காளியை 2 நிமிஷம் போட்டு,
பின்னர் தோலுரித்து,
மிக்ஸியில் அரைத்துக்
கொள்ளவும்.
இஞ்சியை
தோலுரித்து, நன்கு அலம்பி,
பூண்டுடன் சேர்த்து
மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
சின்ன வெங்காயம்,
பச்சை மிளகாயை விழுதாக
அரைக்கவும்.
குக்கரில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய்/நெய் விட்டு, சூடானதும், பொடித்த கிராம்பு முதலானவைகளை போட்டு
பொரித்துக் கொள்ளவும்.அடுத்து, வெங்காயம், பச்சை மிளகாய் விழுது; 4 நிமிஷம்
அடுத்து, பூண்டு இஞ்சி விழுது; 3 நிமிஷம்
மிளகாய்ப் பொடி,
உப்பு சேர்க்கவும்;
2 நிமிஷம் வதக்கவும்.
நறுக்கிய
காய்கறிகளை போட்டு, மிச்சமுள்ள
நெய்/எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன்
ஊற்றி, வதக்கவும் - 8 நிமிஷம்.
களைந்த அரிசியை
போட்டு, 3 நிமிஷம்
வதக்கவும்.காய்கறிகளும், அரிசியும் நன்கு ஒன்றுசேர வேண்டும்.
5-6 டம்ளர் தண்ணீர்
ஊற்றி, தக்காளி விழுதை
சேர்க்கவும்.
குக்கரை மூடி,
சமைக்கவும்.
4 விஸில்
வந்தபிறகு அடுப்பை அணைக்கவும்.
வெங்காயம்+தக்காளி
RAITHA-வுடன், சூடாக புலவ் சாப்பிடவும்.
rajappa