02 March 2018

Mor Kuzhambu --- Bhindi, Poosani

மோர்க்குழம்பு
Bhindi Mor Kuzhambu by Vijaya on 21-02-2018


பூசணி ,கத்தரி, வெண்டை, உருளை, அல்லது சேப்பங்கிழங்கு இவற்றில் ஏதாவது ஒரு காயை/ கிழங்கை எடுத்துக் கொள்ளவும்.

மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும்.

துவரம்பருப்பு 1/2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு 1 டேபிள்ஸ்பூன், தனியா 1/2 டீஸ்பூன், ஊறவைக்கவும்.

1 1/2 மணி ஊற வேண்டும்.

ஊறிய பருப்பு, தேங்காய் 2 டேஸ்பூன், பச்சை மிளகாய் 5 – 6, ஜீரகம் இவை எல்லாவற்றையும் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

5 , 6 கரண்டி தயிரில் இதை கலக்கிக் கொண்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து,, வெந்த காயை சேர்க்கவும்.

ஒரு கொதி வந்ததும் இறக்கி, கறிவேப்பிலை போடவும்.

ரு டீஸ்பூன் தேங்காய் எண்ணையில் கடுகு தாளித்து கொட்டவும்.

29-10-2007 ---- 21-2 -2018  --- BHINDI


24-05-2018 ---- POOSANI    

24-5-2018 Poosani



10-06-2018  Seppan Kizhangu







No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...