தேவையானவை
அரிசி - 400 கிராம்
துவரம் பருப்பு - 200 கிராம்
கொப்பரைத் துருவல், 2 டேபிள்ஸ்பூன்
புளி, எலுமிச்சம் பழ அளவு
உப்பு,
கருவேப்பிலை, சிறிது
நெய், 2 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய், 2 டேபிள்ஸ்பூன்
வறுத்து அரைக்க
தனியா - 2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேஸ்பூன்
வெந்தயம் - 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் (சிகப்பு), 10 - 12
பட்டை, சிறிது
கிராம்பு, 3
காய்கறிகள்:
சின்ன வெங்காயம், 100 கிராம், உருளைக்கிழங்கு, காரட், பச்சைப் பட்டாணி, பீன்ஸ், தலா 50 கிராம், முருங்கைக்காய் (1)
செய்முறை
1. வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடலைப்பருப்பு முதலானவைகளை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
2. இதனுடன் கொப்ப்ரை துருவல், 5 சின்ன வெங்காயம் (பச்சையாக) சேர்த்து, விழுதாக அரைக்கவும்.
3. குக்கரில் சாதத்தை செய்து கொள்ளவும்.
4. இன்னொரு குக்கரில் துவரம் பருப்பை வேக வைக்கவும்.
5. புளியைத் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்துக் கொள்ளவும்.
6. புளித்தண்ணீரில் காய்கறிகளைப் போட்டு, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை மட்டும் எண்ணெயில் கொஞ்சம் வதக்கி வேக விடவும்.
7. அரைத்து வைத்துள்ள விழுதை இதில் போட்டு ஒரு கொதி வந்தவுடன் அணைத்து விடவும்.
8. ஒரு பெரிய வாய் அகன்ற பாத்திரத்தில் சாதத்தைக் கொட்டி, பருப்பை சேர்த்து, தேவையான் உப்பு போட்டு, நன்றாக கலந்து கொள்ளவும்.
8. வெந்த காய்கறி கலவையை கொட்டி கிளறவும்.
9. நெய்யை காய்ச்சி ஊற்றவும்.
10. கொஞ்சம் எண்ணெயில் கருவேப்பிலையை தாளித்து, சாதத்தில் போடவும்.
பிஸி பேளே பாத் தயார்
ராஜப்பா
12:20 Pm
1-2-2010
No comments:
Post a Comment