01 April 2018

Methi Saadam

மேத்தி சாதம்
 தேவையான பொருள்கள.


Methi (வெந்தய கீரை), வெங்காயம், தக்காளி, கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் பொடி, உப்பு, சாதம், நெய்.

செய்முறை

வெந்தய கீரையை நன்றாக அலம்பி இலையை மட்டும் ஆய்ந்து கொஞ்சமாக நறுக்கி கொள்ளவும். சூடாக்கிய வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பை தாளிக்கவும். சிறிதளவு மிளகாய் பொடி சேர்த்து பொரித்துக் கொள்ளவும்.


இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும். முக்கால்வாசி வதங்கியதும் நறுக்கிய கீரையை சேர்த்து நன்றாக வதக்கவும்.

சூடான சாதத்துடன் சிறிது நெய் சேர்த்து வதக்கிய கீரையை கலந்து சாப்பிடவும்.


இது வாசுவின் (ராஜி) தயாரிப்பு
8 Feb 2009
1000 AM

No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...