Pasta என்றால் என்ன என்பது எனக்குத் தெரியாமல் இருந்தது - முதல் முறையாக அதை பங்களூரில் ஒரு ஹோட்டலில் சாப்பிடும் வரை. பின்னர் அஷோக் அதை வீட்டில் பண்ணினான். மூன்றாவது முறையாக சென்ற மார்ச் 21-ஆம் தேதி விஜயா சென்னையில் பண்ணினாள். Pastaவின் சுவையை (?) அறிந்து கொண்டேன்.
Pasta என்பது கோதுமை மாவிலிருந்து செய்யப்படுவது. கோதுமையில் முக்கியமாக இரண்டு வகைகள் பயிரிடப்படுகின்றன். bread-wheat என்று சொல்லப்படும் ”சாதாரண கோதுமை” வகைதான் உலகில் மிக அதிகமாக பயிரிடப்படுகிறது. பஞ்சாப், ஹரியானா, உபி ஆகிய மாநிலங்களில் இந்த வகை கோதுமைதான் பயிரிடப்படுகிறது. நாம் சாப்பிடும் சப்பாத்தி, bread போன்றவை இந்த வகை கோதுமைதான்.
DURUM என்பது அடுத்த வகை கோதுமை. உலகில் விளைச்சலில் இது இரண்டாவது இடத்தில் உள்ளது. இதன் மாவை Semolina என்று அழைப்பார்கள். இந்த மாவை தண்ணீரோடு சேர்த்து பிசைந்து (சில வகைகளில் கோழி முட்டையையும் சேர்ப்பது உண்டு), அதை அச்சில், நம்மூரில் வடாம் பிழிவோமே, அது போன்று பிழிந்து காய வைத்து எடுத்தால், Pasta ரெடி. பலவகை வடிவங்களிலும் (shapes), அளவுகளிலும் (size) Pasta செய்யப்படுகிறது. ஒவ்வொரு வடிவத்திற்கும், அளவிற்கும் ஒரு தனிப்பட்ட பெயர் உண்டு.
என்ன, நம்ம ஊர் வடாம் மாதிரி இருக்கிறதே, என நினைக்கிறீர்களா, நம்ம ஊர் வடாமேதான்.
நம்ம ஊரில் பிரசித்தமான சேமியாவும் (vermicelli, a very thin variety) ஒரு வகை Pastaதான் என்று சொன்னால் நம்புங்கள். Spaghetti (round rods), Macaroni (as long as a little finger, usually striped), Penne (tubular), Lasagne (very wide) என்பவை Pasta வின் சில வகைகள். மேலும் பலவகைகளுக்கு Wikipedia-வில் படிக்கவும். http://en.wikipedia.org/wiki/List_of_pasta
Pasta வை சில குறிப்பிட்ட Sauce களுடன் கலந்து சாப்பிட வேண்டும். சிலவகை Pasta களை காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
நான் நேற்று (12-04-2010) மாலை ஒரு Pasta சமைத்தேன். மிக அருமையாக, ருசியாக (நானே சொல்லிக் கொள்ளவில்லை - அர்விந்த் அளித்த certificate) அமைந்தது.
தேவையானவை
Pasta (Macaroni ஐ நான் உபயோகித்தேன்) - 250 கிராம்.
குடைமிளகாய், 1
வெங்காயம், 1
காரட், 1
பூண்டு, 15 பல்
தக்காளி, 1
முட்டைக்கோஸ், ஒரு கைப்பிடியளவு
சமையல் எண்ணெய், SVS Refined Groundnut Oil, 8 டீ ஸ்பூன்
வெண்ணெய், AMUL, சிறிய 10 கிராம் பாக்கெட்
Cheese, AMUL / Britannia, சிறிய 10 கிராம் பாக்கெட்
Fresh Cream, AMUL, 3 டேபிள்ஸ்பூன்
மிளகாய்ப் பொடி, 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன்,
மிளகு-ஜீரகம் தூள், 1 டீஸ்பூன்,
பூண்டு-இஞ்சி விழுது, 1 டேபிள்ஸ்பூன்
உப்பு, 1 1/2 டீஸ்பூன்
செய்முறை
# எல்லாக் காய்களையும் (தக்காளி, பூண்டு உட்பட) பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
# ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி, கொஞ்சம் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
# முதல் கொதி வந்தவுடன், Pasta வை போடவும்.
# இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
# 10-12 நிமிஷங்கள் வேக விடவும்.
# Pasta வெந்ததும், பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி, உடனே தண்ணீரை வடிகட்டவும். (வடித்த தண்ணீரை கொட்டவேண்டாம்).
# வெந்த Pasta விலும் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
# வாணலியில் 5 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்கவும்.
# பூண்டு-இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும்.
# பின்னர், காய்களை போட்டு வதக்கவும்.
# மிளகுத் தூள், மஞ்சள் தூள், மிளகாய்ப் பொடி போடவும்.
# அடுத்து, தக்காளி வதக்கவும்.
# தக்காளி கொஞ்சம் வதங்கியதும், உப்பு போடவும்.
பயனுள்ள குறிப்புகள் : 1. எப்போதும், தக்காளி போட்டு அது கொஞ்சம் வதங்கியவுடன் தான் உப்பு சேர்க்க் வேண்டும்.
2. தக்காளி நன்கு வதங்கியவுடன்தான் அதில் தண்ணீர் ஊற்ற வேண்டும்
# வெண்ணெய் சேர்க்கவும்.
# 5 நிமிஷங்கள் வதங்கிய பின், 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, வேக விடவும். ஏற்கனவே வடித்து வைத்துள்ள தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
# 5 நிமிஷங்கள் வெந்த பிறகு, Pasta வை போட்டு, Cheese, மற்றும் Fresh Cream சேர்க்கவும்.
# 1 நிமிஷம் வேக விடவும்.
# Pasta வை வேறு ஒரு Casserole க்கு மாற்றவும்.
# Pasta ரெடி. சூடாக பரிமாறவும்.
# Pasta ஆற ஆற கெட்டியாகி விடும்; எனவே (வடித்து வைத்துள்ள) தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.
ராஜப்பா
13-4-2010
11:00 மணி
** Nuitrition of 100 grams of Pasta (uncooked)
-- 12.6 grams Protein
-- 1.5 grams total fat
-- 71 grams Carbohydrate
-- 12.2 grams of dietary fibre
-- 3.2 mg of iron
Subscribe to:
Post Comments (Atom)
DAHI BHINDI
DAHI BHINDI Ingredients ...
-
நம் வீடுகளில் (13ஆம் நாள் சுபஸ்யம்) க்ரேக்கியத்தன்றோ அல்லது சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு மறுநாள் செய்யும் ஸ்வாமி சமாராதனையன்று செய்யும் சமையலை...
-
நம் வீடுகளில் செய்யும் சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு பண்ண வேண்டிய சமையலை விவரமாக காண்போம். 5 சுமங்கலிகளையும், 1 கன்யாப் பெண்ணையும் அழைக்க வேண...
-
திருவாதிரை கூட்டு செய்ய பல காய்கறிகள் தேவைப்படுகின்றன - எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் போதும்; ஆனால் கடையில் கொஞ்சம் கேட்டால் கொடுப்பதில்லை ! என்ன ...
No comments:
Post a Comment