சாம்பார் சாதம்.
1. தேவையான பொருட்கள்.
அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
புளி - ஒரு சிறு எலுமிச்சம் பழ அளவு
சாம்பார் மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
2. காய்கறிகள்:
சாம்பார் வெங்காயம் - 10
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
கலந்த காய்கள் - 2 முதல் 3 கப் வரை (நடுத்தர அளவிற்கு வெட்டியது)
முருங்கைக்காய், கத்திரிக்காய், கேரட், பீன்ஸ், அவரைக்காய், உருளைக்கிழங்கு, குடை மிளகாய், பச்சை பட்டாணி ஆகியவற்றைச் சேர்க்கலாம்.
3. வறுத்தரைக்க:
காய்ந்த மிளகாய் - 2 முதல் 3 வரை
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காய்ம் - ஒரு சிட்டிகை
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
4.தாளிக்க:
எண்ணெய் - 2 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
கொத்துமல்லி இலை - சிறிது
முந்திரிப்பருப்பு - 4 அல்லது 5 (விருப்பப்பட்டால்)
செய்முறை:
அரிசியையும், பருப்பையும் நன்றாகக் கழுவி, அத்துடன் 3 அல்லது 4 கப் தண்ணீரைச் சேர்த்து, குக்கரில் போட்டு 5 முதல் 6 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, அதில் காய்ந்த மிளகாய், தனியா, பெருங்காயம், கடலைப்பருப்பு, தேங்காய்த்துருவல் ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். வறுத்தப் பொருட்கள் சற்று ஆறியவுடன், மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.
புளியை சிறிது நீரில் ஊறவைத்து, கரைத்து, சாற்றைப் பிழிந்தெடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தில் அல்லது வாணலியில், 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சாம்பார் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பின் அதில் பச்சை மிளகாயைக் கீறிப் போட்டு வதக்கவும். மிளகாய், வெங்காயம் இரண்டும் வாசனை வர வதங்கியவுடன், நறுக்கி வைத்துள்ள காய்களைச் சேர்த்து, சிறிது நேரம் வதக்கவும். பின் தக்காளியை நடுத்தரத் துண்டுகளாக வெட்டிச் சேர்த்து சற்று வதக்கவும். பின்னர் அத்துடன் சாம்பார் மிளகாய்ப் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு, காய்கள் மூழ்கும் அளவிற்குத் தேவையானத் தண்ணீரைச் சேர்க்கவும்.
மூடி போட்டு காய்கள் வேகும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும். காய்கள் வெந்ததும், புளித்தண்ணீரைச் சேர்த்துக் கொதிக்க விடவும். தேவையானால் மேலும் நீரைச் சேர்த்துக் கொதிக்க விடவும். நன்றாகக் கொதிக்கும் பொழுது, அடுப்பைத் தணித்து விட்டு, சாதம்/பருப்பு கலவையை, நன்றாக மசித்து விட்டு, இந்த கொதிக்கும் சாம்பாரில் சேர்க்கவும். அத்துடன் பொடித்து வைத்துள்ளப் பொடி, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி இலை ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும்.
ஒரு சிறு வாணலியில் நெய்யை விட்டு சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், வெந்தயம், காய்ந்த மிளகாய், முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளித்து சாதத்தில் கொட்டிக் கிளறி, அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
சாம்பார் சாதம் ரெடி.
ராஜப்பா
01-07-2012
பகல் 12.00 மணி
06 April 2018
Thayir Saadam
தயிர் சாதம்
தேவையான பொருள்கள்:
அரிசி – 1 கப்
தண்ணீர் – 2 கப்
பால் – 5 கப்
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
வெண்ணை – 2 டேபிள்ஸ்பூன். (விருப்பமானால்)
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை – சிறிது
தாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை…
செய்முறை:
அரிசியைக் களைந்து நீரை வடித்துக் கொள்ளவும்.
2 கப் பால், 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் குழைய வேக விடவும்.
சூட்டோடு திறந்து, உப்பு, தயிர் சேர்த்து கரண்டியால் நன்கு மசித்து, சூடான பால் சேர்த்து தளரக் கலக்கவும்.
5 நிமிடங்கள் கழித்துத் திறந்தால் சாதம் இறுகியிருக்கும். இன்னும் சிறிது சூடான பால் சேர்த்து மூடி வைக்கவும்
மீண்டும் 5 நிமிடங்களில் நிறைய பால், வெண்ணை சேர்த்து மிக மிகத் தளர்வான பதத்தில் கலக்கவும். அப்போதுதான் சாப்பிடும் நேரத்தில் சரியான பதத்தில் இருக்கும்.
எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லித் தழை சேர்த்து கலந்து வைக்கவும்.
இந்தத் தயாரிப்பை இரண்டு மணிநேரங்களில் சாப்பிடச் சரியாக இருக்கும். அதற்குமுன் சாப்பிட வேண்டிவந்தால் இன்னும் சிறிது தயிர் சேர்த்து உபயோகிக்கலாம்.
* கலக்கும்போது சரியான பதத்தில் கலந்துவிட்டு சாப்பிடும்போது இறுகியிருப்பதற்காக மீண்டும் தயிரோ, பாலோ சேர்த்துத் தளர்த்தினால் அது சுவையாக இருக்காது.
* தேவைப்பட்டால் கேரட், வெள்ளரியைத் துருவி பரிமாறும் நேரத்தில் சேர்க்கலாம். அல்லது கொட்டை இல்லாத பச்சை திராட்சையையும் சேர்க்கலாம்.
* சாப்பிட இன்னும் 4 மணி நேரங்களுக்கு மேல் ஆகுமென்றால் உபயோகிக்கும் பால் மிதமான சூட்டிலும், மிக அதிக நேரம் ஆகுமென்றால் (பயணங்களுக்கு எடுத்துப் போவது) முற்றிலும் ஆறிய பாலையே உபயோகிக்க வேண்டும். சாதமும் சற்று சூடு ஆறியபின் கலக்க ஆரம்பிக்கலாம். இல்லாவிட்டால் சீக்கிரம் புளித்துவிடும்.
* சாதத்தில் தேங்காயை சிறு சிறு துண்டுகளாக்கிச் சேர்ப்பது வெகு நேரத்திற்கு புளிக்காமல் இருக்க உதவும்.
* தாளிக்கும் எண்ணை மிகமிக லேசானதாக, ஏற்கனவே உபயோகிக்காததாக இருக்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் பாலும் வெண்ணையுமே சுவையைக் கூட்டும் என்பதால் கடுகு நனையும் அளவு எண்ணையில் தாளித்தால் போதுமானது. அதிகமான அல்லது கலங்கலான எண்ணை மொத்த தயிர்சாதத்தின் நிறத்தை மட்டுப்படுத்திவிடும் அல்லது கெடுத்து விடும்.
Thanks to the unknown who wrote this recipe. here
Rajappa
12 April 2009
1000 AM

தக்காளி சாதம் (POONDU)
தக்காளி சாதம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 2 கப்
தக்காளிப் பழம் - 4
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி - 1" துண்டு
பூண்டு - 8 பல்.
பட்டை - ஒரு சிறு துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பட்டை இலை - சிறிது
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
எணணெய் - 4 டேபிள் ஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
செய்முறை:
அரிசியைக் கழுவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊற விடவும். பின்னர் களைந்து கொள்ளவும்.
வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இலேசாகக் கீறி வைக்கவும்.
தக்காளி பழங்களை ஒரு பாத்திரத்தில் போட்டு அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், பாத்திரத்தை மூடி வைத்து, அடுப்பை அணைத்து விடவும். சற்று நேரம் கழித்து, பழங்களை எடுத்து, தோலை உரித்து விட்டு, மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும். அரைத்த சாற்றுடன் மொத்தம் 4 கப் வரும் அளவிற்கு தண்ணீரைச் சேர்க்கவும்.
குக்கரை அடுப்பிலேற்றி அதில் எண்ணெயை விடவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பட்டை இலை ஆகியவற்றைச் சேர்த்து சற்று வறுத்து, பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன், அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்துக் கிளறி விடவும்.
பின்னர் அதில் ஊற வைத்துள்ள அரிசியை, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு சேர்க்கவும். அரிசியைத் தொட்டால் சுடும் அளவிற்கு வரும் வரை கவனமாகக் கிளறி விடவும். பின்னர் அதில் தக்காளிச் சாற்றையும், எலுமிச்சம் சாற்றையும் சேர்த்துக் கிளறி மூடி போட்டு 2 அல்லது 3 விசில் வரும் வரை வேக விட்டு, குக்கர் ஆறியதும், திறந்து கவனமாகக் கிளறி விடவும். கொத்துமல்லித்தழையைத் தூவி அலங்கரிக்கவும்.
வறுத்த முந்திரிப்பருப்பு, வேக வைத்தப் பட்டாணி ஆகியவற்றையும் இத்துடன் கலந்துப் பரிமாறலாம்.
தக்காளி சாதம் ரெடி.
ராஜப்பா
01-07-2012
12-10 பகல்
தக்காளி சாதம் நான் 12-6-2018 அன்று செய்தேன். முழுதும் கரியாகி விட்டது. அத்தனையும் வீண் !!!
மீண்டும், 24-6-2018 ஞாயிறு அன்று செய்தேன். நன்றாக, பிரமாதமாக வந்தது. ஆண்டவனுக்கு நன்றிகள்.

24-06-2018 Thakkali Saadam
தக்காளி சாதம் (பூண்டு, வெங்காயம் இல்லாமல்)
தக்காளி சாதம் (2-வது வகை).
இந்த சாதத்தில் , பூண்டு, வெங்காயம் இல்லை. அதிக காரமும் இல்லை.
தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
தக்காளிப் பழம் (நடுத்தர அளவு) - 4
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பச்சை மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன்
தாளிக்க:
நெய் அல்லது எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிது
முந்திரிப்பருப்பு - 6
செய்முறை:
தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். இஞ்சியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அரிசி, பருப்பு இரண்டையும் நன்றாகக் கழுவி, குக்கரில் போட்டு மூன்றரைக் கப் தண்ணீரைச் சேர்க்கவும். அத்துடன் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து குக்கரை மூடி 5 முதல் 6 விசில் வரும் வரை வேக விடவும்.
சிறிது நேரம் கழித்து, குக்கரைத் திறந்து, நன்றாகக் கிளறி விடவும்.
ஒரு சின்ன வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், சீரகம், கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வறுத்து சாதத்தில் கொட்டிக் கிளறவும்.
ராஜப்பா
01-07-2012
பகல் 12:35 மணி

05 April 2018
Bisi Bele Baath Tamilnadu Style
பிஸி பேளே பாத்
தேவையானவை
அரிசி - 400 கிராம்
துவரம் பருப்பு - 200 கிராம்
கொப்பரைத் துருவல், 2 டேபிள்ஸ்பூன்
புளி, எலுமிச்சம் பழ அளவு
உப்பு,
கருவேப்பிலை, சிறிது
நெய், 2 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய், 2 டேபிள்ஸ்பூன்
வறுத்து அரைக்க
தனியா - 2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேஸ்பூன்
வெந்தயம் - 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் (சிகப்பு), 10 - 12
பட்டை, சிறிது
கிராம்பு, 3
காய்கறிகள்:
சின்ன வெங்காயம், 100 கிராம், உருளைக்கிழங்கு, காரட், பச்சைப் பட்டாணி, பீன்ஸ், தலா 50 கிராம், முருங்கைக்காய் (1)
செய்முறை
1. வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடலைப்பருப்பு முதலானவைகளை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
2. இதனுடன் கொப்ப்ரை துருவல், 5 சின்ன வெங்காயம் (பச்சையாக) சேர்த்து, விழுதாக அரைக்கவும்.
3. குக்கரில் சாதத்தை செய்து கொள்ளவும்.
4. இன்னொரு குக்கரில் துவரம் பருப்பை வேக வைக்கவும்.
5. புளியைத் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்துக் கொள்ளவும்.
6. புளித்தண்ணீரில் காய்கறிகளைப் போட்டு, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை மட்டும் எண்ணெயில் கொஞ்சம் வதக்கி வேக விடவும்.
7. அரைத்து வைத்துள்ள விழுதை இதில் போட்டு ஒரு கொதி வந்தவுடன் அணைத்து விடவும்.
8. ஒரு பெரிய வாய் அகன்ற பாத்திரத்தில் சாதத்தைக் கொட்டி, பருப்பை சேர்த்து, தேவையான் உப்பு போட்டு, நன்றாக கலந்து கொள்ளவும்.
8. வெந்த காய்கறி கலவையை கொட்டி கிளறவும்.
9. நெய்யை காய்ச்சி ஊற்றவும்.
10. கொஞ்சம் எண்ணெயில் கருவேப்பிலையை தாளித்து, சாதத்தில் போடவும்.
பிஸி பேளே பாத் தயார்
ராஜப்பா
12:20 Pm
1-2-2010

Bisi Bele Baath Karnataka Style
BISI BELE BAATH.
BBB Masala Powder Preparation
BBB Masala Powder Preparation
- 4 tsp coriander seeds
- 4 tsp chana dal
- 2 tsp urad dal
- 1 tsp jeera / cumin
- ¼ tsp methi / fenugreek seeds
- ½ tsp pepper
- 3 pods cardamom / elachi
- 1 inch cinnamon / dalchini
- 4 cloves / lavang
- 2 tbsp dry coconut / copra
- 2 tsp poppy seeds / khus khus
- 1 tsp sesame seeds / til
- 1 tsp oil
- 12 dried kashmiri red chilli
- few curry leaves
- pinch of hing / asafoetida
other ingredients:
- ½ carrot, chopped
- 5 beans, chopped
- 2 tbsp matar / peas
- ½ potato / aloo, cubed
- 2 tbsp peanuts
- 2 cups water
- ¼ tsp turmeric / haldi
- 1½ tsp salt
- ¾ cup tamarind extract
- ½ tsp jaggery / gud
- ½ onions, petals
- 1 cup toor dal, cooked
- 2½ cup rice, cooked
- 1 cup water
- 1 tbsp ghee / clarified butter
for tempering:
- 2 tbsp ghee / clarified butter
- 1 tsp mustard / rai
- 1 dried red chilli
- pinch of hing / asafoetida
- few curry leaves
- 10 whole cashew / kaju
firstly, dry roast 4 tsp coriander seeds, 4 tsp chana dal, 2 tsp urad dal, 1 tsp jeera, ¼ tsp methi. Dry roast till the spices turn aromatic, keep aside transferring to blender.
Next, dry roast ½ tsp pepper, 3 pods cardamom, 1 inch cinnamon, 4 cloves, 2 tbsp dry coconut. Dry roast till the spices turn aromatic, keep aside transferring to blender.
Next, Dry roast 2 tsp poppy seeds and 1 tsp sesame seeds. keep aside.
Next, roast 12 dried kashmiri red chilli and few curry leaves with a tsp of oil. Roast till the chillis puffs up and curry leaves turn crisp. transfer to blender.
add in pinch of hing and grind to fine powder without adding any water.
Grind all together for a fine powder.
Grind all together for a fine powder.
Bisi Bele Bath masala powder (BBB Powder) is ready. Store in a airtight container for longer shelf life.
PREPARATION OF BISI BELE BAATH.
Firstly, in a large kadai take ½ carrot, 5 beans, 2 tbsp matar, ½ potato and 2 tbsp peanuts.
add in 2 cups water, ¼ tsp turmeric and 1 tsp salt. mix well.
boil for 8 minutes or till veggies gets half cooked.
now add ¾ cup tamarind extract, ½ tsp jaggery and ½ onions.
boil for 10 minutes or till raw smell of tamarind disappears.
further add 1 cup of cooked toor dal and 2½ cup of cooked rice.
mix well making sure to break if there are any lumps present.
additionally add 1 cup water or more adjusting consistency.
furthermore add 4 tsp prepared bisi bisi bele bath masala, ½ tsp salt, 1 tbsp ghee and mix well.
Cover and simmer for 20 minutes or till the rice and dal absorbs spices.
TEMPERING.
now prepare the tempering by heating 2 tbsp ghee.
once the ghee is hot, add in 1 tsp mustard, 1 dried red chilli, pinch of hing, few curry leaves and 10 whole cashew.
saute and allow to splutter and pour the tempering over bisi bele bath.
finally, give a good mix, and serve bisi bele bath .
24-02-2010
Subscribe to:
Posts (Atom)
DAHI BHINDI
DAHI BHINDI Ingredients ...
-
நம் வீடுகளில் (13ஆம் நாள் சுபஸ்யம்) க்ரேக்கியத்தன்றோ அல்லது சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு மறுநாள் செய்யும் ஸ்வாமி சமாராதனையன்று செய்யும் சமையலை...
-
நம் வீடுகளில் செய்யும் சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு பண்ண வேண்டிய சமையலை விவரமாக காண்போம். 5 சுமங்கலிகளையும், 1 கன்யாப் பெண்ணையும் அழைக்க வேண...
-
திருவாதிரை கூட்டு செய்ய பல காய்கறிகள் தேவைப்படுகின்றன - எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் போதும்; ஆனால் கடையில் கொஞ்சம் கேட்டால் கொடுப்பதில்லை ! என்ன ...