குருமா.
இரண்டு
உருளைக்கிழங்கை வேக விடவும்; தோல் உரித்து 4-ஆக நறுக்கிக்
கொள்ளவும்
வாணலியில்
சிறிது எண்ணெய் விட்டு
சோம்பு போட்டு
பொரிக்கவும்.2 வெங்காயத்தை பொடியாக நறுக்கி இதில் போட்டு வதக்கவும்.
8 பல் பூண்டை போட்டு வதக்கவும்.
2 தக்காளி பழங்களை எட்டாக நறுக்கி, இதில் போட்டு வதக்கவும்.
கொஞ்சம் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 3 டீஸ்பூன் தனியா தூள், 1 டீஸ்பூன் மிளகாய் தூள் போடவும்.
தேவையான உப்பு சேர்க்கவும்.
3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவலை அரைத்து இதில் சேர்க்கவும்.
வேண்டுமானால் தண்ணீர் சேர்க்கலாம்.
ஒரு கொதி வந்தவுடன் உருளைக் கிழங்கு துண்டங்களை போடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
ராஜப்பா
2-7-2013
No comments:
Post a Comment