01 October 2017

ALOO, PEAS KURUMA

இன்று (11-01-2011) பகல் லஞ்ச்சிற்கு சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள என்ன செய்வது என விஜயா யோசித்த சமயத்தில், “குருமா” ஐடியாவை நான் கொடுத்தேன்; அதுமட்டுமல்ல, நானே செய்வதாகவும் கூறினேன். பின்பு என்ன, காய்கறிகளை அலம்ப ஆரம்பித்து ..... குருமா ரெடி பண்ணினேன். சரியாக 1 1/4 மணி நேரம் பிடித்தது. நன்றாக வந்தது, ரசித்து ருசித்து சாப்பிட்டோம்.

உருளை, பட்டாணி, குடமிளகாய் குருமா

தேவையானவை:

1. விழுதாக அரைக்க:

துருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
கசகசா 1 டீஸ்பூன்
சோம்பு, 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு, 4

2. வதக்க:

கிராம்பு, 3
ஏலக்காய், 3
பட்டை, சிறிது ----- இம்மூன்றையும் நன்கு பொடித்துக் கொள்ளவும்.

மற்றவை:

உருளைக்கிழங்கு, 400 கிராம்
பச்சை பட்டாணி (fresh), 200 கிராம், உரித்தது
குடமிளகாய், 1
காரட், 3
(நூல்கோல், காலிஃப்ளவ்ர் இவைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்)
வெங்காயம் மீடியம் சைஸ், 2
தக்காளி, 1

பூண்டு - இஞ்சி விழுது, 1 டே.ஸ்பூன்
மிளகாய்த் தூள், 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள், 1 டீஸ்பூன்
தனியா தூள், 3 டீஸ்பூன்
கரம் மசாலா தூள், 1/2 டீஸ்பூன்

எண்ணெய், 2 டேபிள்ஸ்பூன்
உப்பு

செய்முறை

உருளைக்கிழங்கை குக்கரில் வேகவைத்து, உரித்து, துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.

காய்கறிகளை அலம்பி, நறுக்கி, உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தேங்காய் துருவல் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் 1 டேஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும், கிராம்பு ஆகியவற்றை போட்டு வதக்கவும். (stir fry)

வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பூண்டு - இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும்.

தக்காளியை போட்டு வதக்கவும்.

கொஞ்சம் எண்ணெய் விடலாம்.

5 நிமிஷங்கள் வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள். உப்பு சேர்த்து மீண்டும் வதக்கவும்.

தனியாத் தூள் போடவும். கரம் மசாலா போடவும்.

அரைத்த விழுதை போட்டு 5 நிமிஷங்கள் வதக்கவும். பச்சை வாசனை போக வேண்டும்.

பின்பு, வேக வைத்த உருளைக்கிழங்கு, மற்ற காய்கறிகளை இதில் போடவும். தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். 5 நிமிஷங்கள் கொதிக்கட்டும்.

குருமா ஆற ஆற கெட்டியாக ஆகிவிடும்; எனவே வேண்டுமென்கிற அளவிற்கு தண்ணீர் விடவேண்டும்.

குருமா ரெடி. சப்பாத்தி, புல்கா, தோசை ஆகியவற்றுடன் சாப்பிடலாம்.

ராஜப்பா
இரவு 8-20 மணி
11 ஜனவரி 2011

No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...