13 December 2017

Aval Khichdi

அவல்_ 2 கப்
 பச்சைப்பட்டாணி_ஒரு கைப்பிடி
 கேரட்  1
 காலிஃப்ளவர்_கொஞ்சம்
 சாம்பார் வெங்காயம      12
தக்காளி_பாதி
 இஞ்சி_ஒரு சிறிய துண்டு
 பூண்டு_4 பல்
 பச்சை மிளகாய் 2
மஞ்சள் தூள்_சிறிது
 உப்பு_தேவைக்கு
 கொத்துமல்லி இலை   ஒரு கொத்து
 எலுமிச்சை சாறு 1/2 டீஸ்பூன்


தாளிக்க:

நல்லெண்ணெய்   2 டீஸ்பூன்
 கடுகு
 உளுந்து
 கடலைப் பருப்பு
 சீரகம்
 முந்திரி
 பெருங்காயம்
 கிராம்பு  2
பிரிஞ்சி இலை  1
கறிவேப்பிலை


செய்முறை:

பச்சைபட்டாணியை ஊற வைக்கவும்; இரண்டு மணி நேரம் ஊறட்டும்.

அவலைத் தண்ணீரில் போட்டு  மூன்று முறை அலசி விட்டு  தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து  ஊற வைக்கவும்.

நன்றாக ஊறியதும் தண்ணீரிலிருந்து பிழிந்தெடுத்து கொள்ளவும்.
கேரட்டை சீவி அதன்பிறகு சிறுசிறு நீளத்துண்டுகளாக நறுக்கவும்.

காலிஃப்ளவரை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுத்து சிறுசிறு பூக்களாகப் பிரித்துக்கொள்ளவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.

மிளகாயை நீளவாக்கில் கீறவும்.

இஞ்சி, பூண்டு லேசாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்து கொள்ளவும்.


அடுத்து  இஞ்சி ,பூண்டு வதக்கி பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி இவற்றை வதக்கவும்.

அடுத்து கேரட், பட்டாணி, காலிஃப்ளவர்  வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் சிறிது உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறிவிட்டு லேசாக தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.

காய் வெந்ததும் அவலைக்கொட்டிக் கிளறவும். இப்போது தண்ணீர்  வேண்டாம்.

உப்பு தேவையானால் சேர்த்துக்கொள்ளவும்.

மிதமான தீயில் சிறிது நேரம் வைத்திருக்கவும்.

எலுமிச்சை சாறு விட்டுக் கிளறி, கொத்துமல்லி தூவி  இறக்கவும்.


rajappa
07-01-2014

No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...