04 December 2017

Thakkali Dosai

க்காளி தோசை


தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி – 1/2 கிலோ
பச்சரிசி – 100 கி
மிளகாய் வற்றல் – தேவைக்கேற்ப
சின்ன வெங்காயம் – 1/4 கிலோ
பச்சை மிளகாய் – 5
இஞ்சி - சிறிதளவு
பூண்டு – 20
தக்காளி – 1/2 கிலோ
கொத்து மல்லி – 1 கட்டு
உப்பு – தேவைக்கேற்ப
கெட்டித்தயிர் – 1/2 லிட்டர்
பெரிய வெங்காயம் – 1/4 கிலோ
கடுகு, கடலைப் பருப்பு, உ. பருப்பு – தாளிக்க
எண்ணெய் – 1/4 லிட்டர்

செய்முறை

புழுங்கல் அரிசி, பச்சரிசி இரண்டையும் சேர்த்து ஊறவைத்து, அத்துடன் இஞ்சி, பூண்டு, மிளகாய் வற்றல் சேர்த்து அரைக்கவும். முக்கால் பதம் வந்ததும் தக்காளியை நறுக்கி, மாவுடன் சேர்த்து அரைத்து உப்பு சேர்க்கவும்.

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இவற்றை கடுகு, உ.பருப்பு, கடலை பருப்புடன் 5 ஸ்பூன் எண்ணெய் விட்டு தாளித்து மாவுடன் கலந்து கொள்ளவும்.

கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி இவற்றையும் மாவுடன் சேர்த்து, மெல்லிய தோசைகளாக வார்க்கவும்

Rajappa
03-08-2008
11:00 AM

No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...