பூண்டுக் குழம்பு
பூண்டு, புளி – தலா 200 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கி
பெரிய வெங்காயம், தக்காளி – தலா 150 கி (பொடிசாக நறுக்கியது)
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்
தனியாத்தூள் – 2 டீஸ்பூன்
சீரகம், மிளகுத்தூள் – தலா 50 கி (7 – 8 டீஸ்பூன்)
உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை
பூண்டு, வெங்காயத்தை தோல் உரித்துக் கொள்ளவும்.
நஎண்ணெயை காய வைத்து, பூண்டு, சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
பிறகு, நறுக்கிய வெங்காயம், தக்காளியை வதக்கி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து 2 நிமிஷம் வதக்கவும்.
இதில் சீரகத்தூள்,மிளகுத்தூள் சேர்த்து புளியை கெட்டியாக கரைத்து விட்டு, 10 நிமிஷம் கொதிக்கவிடவும்.
எண்ணெய் மேலாக பிரிந்து வரும்போது இறக்கி, கறிவேப்பிலை போடவும்
Rajappa
09 Jan 2009
1000
Subscribe to:
Post Comments (Atom)
DAHI BHINDI
DAHI BHINDI Ingredients ...
-
நம் வீடுகளில் (13ஆம் நாள் சுபஸ்யம்) க்ரேக்கியத்தன்றோ அல்லது சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு மறுநாள் செய்யும் ஸ்வாமி சமாராதனையன்று செய்யும் சமையலை...
-
நம் வீடுகளில் செய்யும் சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு பண்ண வேண்டிய சமையலை விவரமாக காண்போம். 5 சுமங்கலிகளையும், 1 கன்யாப் பெண்ணையும் அழைக்க வேண...
-
அது மாகாளியா, அல்லது மாகாணியா? பெயர் என்னவாயிருந்தால் என்ன, அது மலைப்பிரதேசங்களில் விளையும் ஒரு மரத்தின் வேர். கூகிளில் தேடியபோது, இந்தக் ...
No comments:
Post a Comment