ஏதேனும் ஒரு காய் (முருங்கைக் காய், சின்னவெங்காயம், வெண்டைக்காய், கத்தரிக்காய், Capsicum, பூசணி, பரங்கிக்காய்).
துவரம்பருப்பு, 150 கிராம்.
புளி, எலுமிச்சம் பழ அளவிற்கு
கடுகு, உளுத்தம்பருப்பு --- ஒவ்வொன்றும் 1/2 டீஸ்பூன் அளவு.
உப்பு, தேவையான அளவு.
செய்முறை
காயை நன்கு அலம்பி, நறுக்கிக் கொள்ளவும்.
துவரம் பருப்பை குக்கரில் வேக வைக்கவும்.
புளியைத் தண்ணீரில் ஊற வைத்து, நன்கு கரைத்துக் கொள்ளவும்.
புளித்தண்ணீரில் காயைப் போட்டு, உப்பு சேர்த்து, 12-15 நிமிஷங்கள் வேக விடவும்.
சாம்பாருக்கான அரைத்த மசாலா விழுதை (செய்முறை இங்கே) போட்டு கொதிக்க விடவும்.
வெந்த து. பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.
கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும்.
கருவேப்பிலை சேர்த்த பின்னர், அடுப்பை அணைக்கவும்.
இது முருங்கைக்காய் சாம்பார்
ராஜப்பா
1:00 PM
24 Feb 2010
13-05-2018
BHENDI Sambar
No comments:
Post a Comment