துவரம் பருப்பு --- ஒரு கைப்பிடி
தக்காளிப்பழம், 2
புளி --- எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் --- 1/2 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
பெருங்காயம், ஒரு சிட்டிகை
கருவேப்பிலை கொஞ்சம்
கடுகு 1/2 டீஸ்பூன்
உப்பு, தேவைக்கேற்ப
GRIND TOGETHER :
தனியா 2 டீஸ்பூன்,
துவரம்பருப்பு 1 டீஸ்பூன்,
ஜீரகம் 1/4 டீஸ்பூன்,
மிளகு 1/4 டீஸ்பூன்,
வரமிளகாய் 5-6
METHOD
மேலே GRIND என சொல்லியவற்றை நெய்யில் வறுத்துக் கொண்டு, அரைத்துக் கொள்ளவும்.
தக்காளியை கொதிநீரில் போட்டு நசுக்கிக் கொள்ளவும்.
சிறிதளவு புளியை நீரில் கரைத்து சாறு எடுத்துக் கொண்டு, புளிச்சாற்றில் தக்காளியை சேர்க்கவும்.
துவரம்பருப்பை வேகவைத்து, மசித்துக் கொள்ளவும்.
மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம் ஆகியவைகளை மசாலா விழுதுடன் சேர்த்து, புளித்தண்ணீரில் நன்கு கொதிக்க விடவும்.
கொதித்தவுடன், துவரம்பருப்பை நீர் விட்டு இதில் சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும் கருவேப்பிலை சேர்த்து, நெய்யில் கடுகு தாளித்து கொட்டவும்.
விஜயா
29 – 10 – 2007
12:15 PM
No comments:
Post a Comment