02 February 2018

கல்யாண ரஸம்

கல்யாண ரஸம்.


தேவையானவை

புளி  -- நெல்லிக்காய் அளவு
தக்காளிப் பழம் --- 3
துவரம்பருப்பு --- 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை --- கொஞ்சம்
உப்பு --- தேவைக்கேற்ப
பெருங்காயம் --- சிட்டிகை

வறுத்து, அரைக்க

நெய் --- 1 டேபிள்ஸ்பூன்
தனியா --- 2 டீஸ்பூன்
துவரம்பருப்பு --- 2 டீஸ்பூன்
மிளகு ---1 டீஸ்பூன்
வரமிளகாய் --- 1
ஜீரகம் --- 1/2 டீஸ்பூன்

தாளிக்க

கடுகு --- 1 டீஸ்பூன்
நெய் --- 1 டீஸ்பூன்

செய்முறை

1.   புளியைக் கரைத்து, சாறு எடுத்துக் கொள்ளவும்.
2.   துவரம்பருப்பை குக்கரில் வேக வைத்து, மசித்துக் கொள்ளவும்.
3.   ஒரு வாணலியை சூடாக்கி, நெய் ஊற்றி, அரைக்க கொடுத்துள்ள சாமான்களை (ஜீரகம் தவிர) வறுத்துக் கொள்ளவும். (து. பருப்பு பொன்னிறமாக இருக்க வேண்டும்.)
4.   வறுத்த சாமான்களை மிக்ஸியில் போட்டு, ஜீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். [தண்ணீர் ஊற்ற வேண்டாம்)
5.   புளி சாற்றை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, ஒரு தக்காளியை சிறு துண்டங்களாக் நறுக்கி, அதில் போடவும்.
6.   உப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் இதில் சேர்க்கவும்.
7.   மீதியுள்ள 2 தக்காளிப் பழங்களை மிக்ஸியில் அரைத்து, இதில் ஊற்றவும். நன்கு கலக்கவும்.
8.   அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
9.   புளியின் பச்சை வாசனை போகும்வரை கொதிக்கட்டும்; பின்னர் இதில் மசித்த து.பருப்பை சேர்க்கவும். நன்கு கலக்கவும். இரண்டு கப் தண்ணீர் ஊற்றவும். 5 நிமிஷங்கள் கொதிக்கட்டும்.
10. கடைசியாக, வறுத்து-அரைத்த பொடியை (மேலே 3 மற்றும் 4 பார்க்க) இதில் போட்டு, கலக்கவும்.
11. ரஸத்தில் நுரை வரும்போது, அடுப்பிலிருந்து எடுத்து விடவும்.
12. கடுகு, நெய் தாளித்து ரஸத்தில் கலக்கவும்.
13. கொத்த மல்லித் தழைகள் போடவும்.
14. ரஸம் ரெடி. சூடாக பரிமாறவும்


ராஜப்பா
20-11-2013

No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...