கறிவேப்பிலை குழம்பு
கறிவேப்பிலை
- 2 கைப்பிடி, ஆய்ந்தது.
உளுத்தம்பருப்பு
--- 1 டீஸ்பூன்
மிளகு ---- 2 டீஸ்பூன்
சிகப்பு
மிளகாய் ---- 2
பூண்டு
----- 4 பல்
புளி ---
சிறிதளவு.
உப்பு ---
தேவைக்கேற்ப
எண்ணெய்
---- 3 டேபிள்ஸ்பூன்
கடுகு ----
கொஞ்சம்
பெருங்காயம்
--- கொஞ்சம்.
வாணலியில்
ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அது சூடானதும், உளுத்தம்பருப்பு, மிளகு, மிளகாய்,
பூண்டு ஆகியவற்றை போட்டு வதக்கவும். மிளகாய் குறைவாகவும், மிளகு அதிகமாகவும். பின்னர்
அதில் கறிவேப்பிலை தழைகளை போட்டு வதக்கவும்.
வதக்கியதை
மிக்ஸியில் போட்டு, புளியையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி, கடுகு
போடவும்.
கடுகு
வெடித்தவுடன், அரைத்துள்ள விழுதை சிறிது தண்ணீர் விட்டு கரைத்துக் கொண்டு, அதில் ஊற்றவும்.
விழுதாகவே போட்டால் அது சரியாக கொதிக்காது.)
பெருங்காயம்
போடவும்.
நன்றாக 6-7 நிமிஷம் கொதித்து, குழம்பு பதத்திற்கு வந்த பின் அடுப்பை அணைக்கவும்Rajappa
17-7-2014
இது நாங்கள் 15-7-2018 அன்று செய்த குழம்பு
No comments:
Post a Comment