08 February 2018

கத்தரிக்காய் கொத்ஸு - Brinjal Gothsu

BRINJAL GOTHSU

Ingredients பெரிய கத்தரிக்காய் - 1
வெங்காயம் - மீடியம் சைஸ், 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
தாளிக்க :
எண்ணெய், 3 டீஸ்பூன்.
கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு
”கறி-மிளகாய்” பொடி - 3 டேபிள்ஸ்பூன்.
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்.
புளித் தண்ணீர் - ஒரு சிறிய டம்ளர் நிறைய.

“கறி-மிளகாய்” பொடி செய்ய ::
 தனியா - 2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
சிகப்பு மிளகாய் - 5
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு இவற்றை வறுத்து அரைத்துக் கொள்ளவும்.

செய்முறை
கத்தரிக்காயை எண்ணெய் தடவி நெருப்பில் நன்கு சுட்டுக் கொள்ளவும்.

இன்று காலை எங்கள் வீட்டில் சுட்டது


வெங்காயத்தை பொடிசாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியையும் பொடிசாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, க.பருப்பு, உ.பருப்பு இவற்றை தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயத்தையும், நறுக்கிய பச்சை மிளகாயையும் போட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கவும்.
தக்காளியை சேர்த்து வதக்கவும்
கத்தரிக்காயை தோல் நீக்கி, நன்கு மசித்துக் கொள்ளவும்.
மசித்த கத்தரிக்காயை வெங்காயம், தக்காளியுடன் சேர்த்து வதக்கவும்.
ஒரு நிமிஷம் கழித்து புளித்தண்ணீரை ஊற்றவும்.
உப்பு போடவும். கறிப்பொடி போடவும்.

 5 நிமிஷங்கள் நன்கு கொதித்தவுடன், கொத்தமல்லி போட்டு, அடுப்பை அணைக்கவும்.

கொத்ஸு ரெடி. சூடாக இட்லி / தோசை பண்ணி கொத்ஸுவுடன் சாப்பிடலாம்.

ராஜப்பா
17-02-2013
10:00 காலை

இன்று காலை எங்கள் வீட்டில் தோசை - கொத்ஸு டிஃபன்.













No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...