எண்ணெய் கத்தரிக்காய் காரக்குழம்பு
மிகச்சிறிய வயலெட் நிற கத்தரிக்காய் – 150 கி
சின்ன வெங்காயம் – 100 கி
பூண்டு – 12; தக்காளி – 4
வரமிளகாய் – 4
கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு, சீரகம், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், வெந்தயம் – தலா 1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
அரைக்க:
தேங்காய்த்துருவல் 1/2 கப், முந்திரி – 6
செய்முறை
கத்தரிக்காயை நன்கு அலம்பி, காம்புடன் பூ போல வெட்டிக்கொள்ளவும்.
பூண்டை உரித்து, தட்டிக்கொள்ளவும்.
தேங்காய், முந்திரியை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உ பருப்பு, சோம்பு, சீரகம், வரமிளகாய், போட்டு வதக்கவும்.
இதில் சின்ன வெங்காயம், கத்தரிக்காய் சேர்த்து வதக்கி, கத்தரிக்கய் வெந்ததும், புளியை கெட்டியாக கரைத்து அதில் சேர்த்து, நன்றாக கொதிக்கவிடவும்.
எண்ணெய் மேலாக பிரிந்து வந்ததும், அரைத்த தேங்காய்-முந்திரி விழுதை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
Rajappa
07 Jan 2009
10:55 AM
Subscribe to:
Post Comments (Atom)
DAHI BHINDI
DAHI BHINDI Ingredients ...
-
நம் வீடுகளில் (13ஆம் நாள் சுபஸ்யம்) க்ரேக்கியத்தன்றோ அல்லது சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு மறுநாள் செய்யும் ஸ்வாமி சமாராதனையன்று செய்யும் சமையலை...
-
நம் வீடுகளில் செய்யும் சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு பண்ண வேண்டிய சமையலை விவரமாக காண்போம். 5 சுமங்கலிகளையும், 1 கன்யாப் பெண்ணையும் அழைக்க வேண...
-
திருவாதிரை கூட்டு செய்ய பல காய்கறிகள் தேவைப்படுகின்றன - எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் போதும்; ஆனால் கடையில் கொஞ்சம் கேட்டால் கொடுப்பதில்லை ! என்ன ...
No comments:
Post a Comment