15 February 2018

கறிவேப்பிலை-பூண்டு காரக்குழம்பு (ஜெயா டீவி)

கறிவேப்பிலை-பூண்டு காரக்குழம்பு  (ஜெயா டீவி)

** இது ஜெயா டீவியில் நேற்று முன்தினம் திரு தாமோதரன் செய்து காட்டிய குழம்பு.  இன்று பகல் உணவிற்கு விஜயா இதை பண்ணினாள். மிக ருசியாக இருந்தது. ரசித்து சாப்பிட்டோம்.

தேவையானவை:

கறிவேப்பிலை, காம்புடன் இருக்கவேண்டும் (இலைகளாக ஆயக்கூடாது)
வெங்காயம், 2, பொடியாக நறுக்கியது
தக்காளி, 1, பொடியாக நறுக்கியது
பூண்டு, 8 பற்கள்
பூண்டு-இஞ்சி விழுது, 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள், 3/4 டீஸ்பூன்
தனியா தூள், 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள், 2 டீஸ்பூன்
புளி, ஒரு எலுமிச்சம்பழ அளவிற்கு
நல்லெண்ணெய், 2 டேபிள்ஸ்பூன் (கவனிக்கவும், நல்லெண்ணெய்)
சோம்பு, 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய், 2
உப்பு, தேவைக்கேற்ப

செய்முறை

நல்லெண்ணெயை வாணலியில் ஊற்றி, சூடானதும், கறிவேப்பிலையை காம்போடு எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். ஆறியதும், விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

மீண்டும் ந.எண்ணெய் ஊற்றி, சோம்பு, சிவப்பு மிளகாய் (கிள்ளிப் போடவும்) ஆகியவற்றை தாளிக்கவும்.

பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.

பூண்டு போட்டு வதக்கவும்.

பூண்டு-இஞ்சி விழுது, பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.

அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை விழுதை போட்டு வதக்கவும்.

மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய்த் தூள் போட்டு வதக்கவும்.

புளியை கரைத்து இதில் ஊற்றி, உப்பு சேர்க்கவும்.

கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, எண்ணெய் மேலே பிரிந்து வரும் வரை (சுமார் 10 நிமிஷங்கள்) கொதிக்க விடவும்.

கறிவேப்பிலை-பூண்டு காரக்குழம்பு ரெடி. இட்லி தோசை, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளவோ, அல்லது சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவோ, நன்றாக இருக்கும்.

ராஜப்பா
ஞாயிறு, 23-01-2011
மாலை 5 மணி


No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...