எழுகறி கூட்டு
உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, சக்கரைவள்ளிக் கிழங்கு -
ஒவ்வொன்றும் 100 கிராம். [வேகவைத்து தோலுரித்துக் கொள்ளவும்]
வாழைக்காய் - ஒரு பாதி;
பூசணி, பரங்கிக்காய், ஒவ்வொன்றும் ஒரு சிறு பத்தை
அவரைக்காய், புடலங்காய், பீன்ஸ், கொத்தவரங்காய், பச்சைப்பட்டாணி, சௌசௌ, காரட் --- 100 கிராம் ஒவ்வொன்றும்.
மொச்சை முதலான சில கொட்டை வகைகள், வேர்க்கடலை.
கறிவேப்பிலை
துவரம் பருப்பு ---- 3 டேபிள்ஸ்பூன்
புளி ---- எலுமிச்சம் பழ அளவு.
சாம்பார் மிளகாய்ப் பொடி ---- 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் ---- 1/2 டீஸ்பூன்
உப்பு,
அரைத்துக் கொள்ள --
தனியா 2 டேபிள்ஸ்பூன்,
கடலைப் பருப்பு 1 டீஸ்பூன்
வெந்தயம் -- 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் -- 8 - 10
தேங்காய் துருவியது --- 2 டேபிள்ஸ்பூன்
METHOD
தேங்காய் தவிர மற்றவற்றை சிவக்க வறுத்து, கடைசியில் தேங்காய் சேர்த்து
வறுத்து, தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
துவரம்பருப்பை குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
எல்லா காய்களையும் மீடியம் சைஸில் துண்டங்களாக நறுக்கிக்
கொள்ளவும்.
புளியை நன்கு கரைத்து, உப்பு கொஞ்சம் போட்டு, அதில் காய்களை போட்டு வேக விடவும்.
சாம்பார் பொடி, மஞ்சள் தூள் போடவும். சுமார் 15 நிமிஷங்கள் வேகட்டும்.
காய்கள் வெந்தவுடன், அதில் வெந்த துவரம்பருப்பை
சேர்த்து, அரைத்த விழுதையும் சேர்க்கவும்.
உப்பு போடவும். கறிவேப்பிலை போட்டு எல்லாவற்றையும் நன்கு கிளறி
விடவும்.
5 நிமிஷங்கள் கொதிக்கட்டும்.
எழுகறி கூட்டு தயார்.
திருவாதிரை நன்னாளில் களியோடு சேர்த்து சூடாக பரிமாறவும்.
Rajappa
7-7-2014
No comments:
Post a Comment