எலுமிச்சம் பழம் - 25,
உப்பு - கால் கிலோ,
மிளகாய்ப் பொடி - 200 கிராம்,
மஞ்சள் பொடி - 25 கிராம்,
வெந்தயப் பொடி - 25 கிராம் ,
பெருங்காயப் பொடி - 10 கிராம் ,
நல்லெண்ணெய் - கால் கிலோ
கடுகு - 1 டீஸ்பூன்
எலுமிச்சம் பழங்களைக் கழுவி, ஈரமில்லாது துடைத்து, இரண்டாக நறுக்கி, சாறு வரும்படி பிழியவும்.
அந்தச் சாற்றில் கொஞ்சம் உப்புப் போட்டு வைக்கவும்.
பின்பு, எலுமிச்சம் பழங்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அந்த சாற்றில் போட்டு வைத்து, மீதி உப்பையும், மஞ்சளையும் போட்டு, 3 நாட்கள் ஊற வைக்க வேண்டும்.
பின்பு கடாயில் எண்ணெய் விட்டு, அடுப்பில் வைத்துக் காய்ச்சி, கடுகு போட்டு வெடித்ததும், கீழே இறக்கி வைத்து, மிளகாய்ப் பொடி, வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி முதலியவற்றைப் போட்டு நன்றாகக் கலக்கவும்.
ஆறியதும் எலுமிச்சம் பழத் துண்டங்களைப் போட்டுக் கலக்கி, ஈரம் இல்லாத ஜாடிகளில் போட்டு மூடி வைக்கவும்.
2 நாட்கள் கழித்து, ஜாடியின் மூடியை எடுத்து, மேலே ஒரு வெள்ளைத் துணியைக் கட்டி, நன்றாகக் குலுக்கி விட்டு, வெயிலில் வைக்கவும்.
பனிக் காலங்களிலும் வெயில் வரும்போது, அவ்வப்போது வெயிலில் வைத்து எடுத்து வைக்க வேண்டும்
குறிப்பு: இதை ஒரு வருடம் கூட வைத்திருக்கலாம். இதை சாதத்தில் கலந்து சாப்பிடலாம். தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
rajappa
No comments:
Post a Comment