தேவையானவை:
250 கிராம் baby corn
குடமிளகாய் பெரிய சைஸ், 1
வெங்காயம், 2
தக்காளிப்பழம், 1
2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
2 டேபிள்ஸ்பூன் பூண்டு, இஞ்சி விழுது
2 டேபிள்ஸ்பூன் தக்காளி சாஸ் (tomato sauce)
4 டேபிள்ஸ்பூன் சோள மாவு (Corn flour)
1 டீஸ்பூன் சோயா சாஸ் (Soya sauce)
2 டீஸ்பூன் மிளகாய் தூள்
வெண்ணெய், 10 கிராம் (optional)
உப்பு
செய்முறை
பேபிகார்னை 4 செமீ நீளத்திற்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
சோளமாவு, 1 டே.ஸ்பூன் பூண்டு-இஞ்சி விழுது, மிளகாய்த்தூள், கொஞ்சம் உப்பு இவைகளுடன் பேபிகார்ன் துண்டுகளை நன்கு பிசறி வைக்கவும்.
கொஞ்சம் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம். 10 நிமிஷம் வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், மீதமுள்ள 1 டே.ஸ்பூன் பூண்டு-இஞ்சி விழுது, வெங்காயம் (நீளவாக்கில் நறுக்கியது) போட்டு வதக்கவும்.
தக்காளியை நறுக்கி இதில் போட்டு வதக்கவும்.
குடமிளகாயையும் நீள வாக்கில் நறுக்கி, இதில் போட்டு வதக்கவும்.
4-5 நிமிஷங்கள் வதங்கியதும், தக்காளி சாஸ், சோயா சாஸ், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து 4 நிமிஷங்கள் வதக்கவும்.
இன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு, (இத்தோடு வெண்ணெயையும் சேர்க்கலாம், வாசனைக்கு) நன்றாக சூடானதும்,பிசறி வைத்துள்ள பேபிகார்ன் துண்டங்களை போட்டு மொறுமொறுவென்று பொன்னிறமாக பொரிக்கவும்.
பொரித்த துண்டங்களை க்ரேவியில் சேர்த்து, இன்னும் 5 நிமிஷங்கள் வதக்கவும்.
Chilli, Crispy Baby corn Ready ! சூடாகப் பரிமாறவும்.
rajappa
7-1-2010

super mama......my mouth started watering now itself.let me try it out. my daughters will definetely love to eat it.
ReplyDelete