மாகாளிக்கிழங்குகளை இளசாக பார்த்து வாங்கவும்.
வீட்டிற்கு வந்ததும் கிழங்குகளை தண்ணீரில் போட்டுவைக்கவும். சுமார் 16 மணி நேரம் ஊற வேண்டும்.
கிழங்குகளை தோல் சீவிக்கொள்ளவும்.
கிழங்கின் நடுவில் உள்ள நரம்புப் பகுதியை வெட்டி எறிந்து விடவும்.
கிழங்கின் சத்துப் பகுதியை சிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
துண்டங்களை நன்கு (மண் போக) அலம்பிக் கொள்ளவும்
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் துண்டங்களைப் போட்டு, மஞ்சள் தூள் (ஒரு டீஸ்பூன்), கடுகுப் பொடி (2 டேபிள்ஸ்பூன்), மிளகாய்த்தூள் (1/2 கப்), பொடி செய்த கல் உப்பு (3/4 கப்) சேர்க்கவும்.
நன்கு குலுக்கி, கலக்கிக் கொள்ளவும்.
8 எலுமிச்சம் பழங்களைப் பிழிந்து சாற்றை இதில் சேர்க்கவும்.
இத்துடன் 1 லிட்டர் தயிர் ஊற்றி நன்றாகக் கலக்கவும்.
7 நாட்கள் ஊறவேண்டும்; தினமும் கிளறி விடவும்.
சுத்தமான ஜாடிக்கு ஊறுகாயை மாற்றிக் கொள்ளவும்.
(மேற்குறிப்பிட்ட அளவுகள் ஒரு கிலோ கிழங்கிற்கு சரியாக இருக்கும்)
ராஜப்பா
18-11-2009
பகல் 1 மணி
KIZHANGU
KIZHANGU - CLEANED AND CUT
No comments:
Post a Comment