Mixed Veg KOOTTU
உருளை கிழங்கு மீடியம் 2
பீன்ஸ், 10
வாழைக்காய், ½
காரட், 1
குடைமிளகாய், மீடியம் 3
கத்தரிக்காய், 2
பச்சைப் பட்டாணி, ஒரு கைப்பிடி
ஊற வைத்த கொத்துக்கடலை, ஒரு கைப்பிடி (8 முதல் 10 மணி நேரம் ஊறவேண்டும்)
ஊற வைத்த வேர்க்கடலை, ஒரு கைப்பிடி
துவரம்பருப்பு, 4 டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு, 1 டேபிள்ஸ்பூன்
தனியா, 1 டீஸ்பூன்
வெந்தயம், ½ டீஸ்பூன்
வரமிளகாய், 6
புளி, நெல்லிக்காய் அளவு (தண்ணீரில் ஊற வைக்கவும்)
குழம்பு மிளகாய் பொடி, 1 டீஸ்பூன்
பெருங்காயம் தூள், கொஞ்சம்
மஞ்சள் பொடி, 1 டீஸ்பூன்
துறுவிய தேங்காய், 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொஞ்சம்
உப்பு, தேவைக்கேற்ப.
காய்களை சின்ன சின்ன சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
பட்டாணி போடவும்.
ஊற வைத்த கொத்துக்கடலை, வேர்க்கடலை சேர்க்கவும்.
மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, எல்லாவற்றையும் வேக விடவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, தனியா, கடலைப்பருப்பு, வரமிளகாய், வெந்தயம் ஆகியவற்றை வறுக்கவும்.
தேங்காய் துருவலையும் சேர்த்து வறுக்கவும்
இவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
ஊறிய புளியை கரைத்துக் கொள்ளவும்.
காய் பாதி வேகும்போது, கரைத்த புளியை ஊற்றவும்.
சிறிது உப்பு சேர்க்கவும்.
பெருங்காயம், குழம்பு மிளகாய்ப் பொடி போடவும். 5 நிமிஷம் கொதிக்கட்டும்.
பின்னர், மேலே சொன்ன அரைத்ததை போடவும்.
வேகவிட்ட துவரம்பருப்பை சேர்க்கவும். 4 – 5 நிமிஷம் கொதிக்கட்டும்.
பின்னர், கறிவேப்பிலை போட்டு, அடுப்பை அணைக்கவும்.
கூட்டு ரெடி.
சூடாக சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.
சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம்.
Rajappa7-7-2014
Later, on 14 May 2018, I made this Koottu with brinjal, carrot 1 No, Capsicum 1/2 and ate with ADAI breakfast.
VEGETABLE KOOTTU
No comments:
Post a Comment