15 November 2017

Suraikkai koottu Lauki

சுரைக்காய் என தமிழிலும், சொரக்காயா (தெலுங்கு), DUDHI or LAUKI என ஹிந்தியிலும் bottle gourd என ஆங்கிலத்திலும் இந்த காய் அறியப்படுகிறது.

ஆயுர்வேதத்தில் இது மிக சத்து நிரம்பிய காயாக புகழப்படுகிறது. 96.1% தண்ணீர் இருப்பதால் ஜீரணத்திற்கு எளிதாகிறது. கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் எதுவும் கிடையாது. நார்ச்சத்து நிரம்பியது. இரும்பு சத்தும், விட்டமின் C, B complex அடங்கியது.

100 கிராம் காயில் சோடியம் 1.8 மில்லிகிராம், 87 மிகி பொட்டாஷியம் உள்ளதால், உயர் ரத்த அழுத்தத்திற்கு Hypertension ,high blood pressureக்கு மிக நல்லது.

100 கிராம் சுரைக்காயில் 12 கலோரிகளே உள்ளன. Diabetesக்கும் சிறுநீரக வியாதிகளுக்கும் மிகச் சிறந்தது. Liver functionக்கு ரொம்பவே நல்லது. Kidney stonesகளை கரைக்க வல்லது. வயிற்றுப்போக்கு, வெயிற்காலத்தில் ஏற்படும் தாகத்திற்கு இதன் ஜூஸை குடிக்கலாம். குளிர்ச்சியானது.


இப்போது சுரைக்காய் கூட்டு செய்வதைப் பார்ப்போம்.

சுரைக்காயை தோல் சீவி, சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.

100 கிராம் கடலைப் பருப்பை தண்ணீரில் 30 நிமிஷங்கள் ஊறவைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, ஜீரகம், பெருங்காயம் தாளிக்கவும்.

கடலைப்பருப்பை போட்டு 2 நிமிஷம் வதக்கவும்.

நறுக்கிய சுரைக்காயை போட்டு, 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் மிளகாய் தூள் போடவும்.

தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வேக விடவும்.

காய் வெந்ததும், தேவையானால் சிறிது வெல்லம், சிறிது தேங்காய் துருவல் போடவும். (நான் போட மாட்டேன்)

சப்பாத்தியுடன் சூடாக பரிமாறவும்.

ராஜப்பா
10:30 காலை
28-02-2010   23-05-2018

No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...