01 November 2017

ஆவக்காய் ஊறுகாய் Avakkai

ஆவக்காய் ஊறுகாய்




மீடியம் சைஸ், கெட்டியான, உள்புறம் வெள்ளையாக இருக்கும் தரமான மாங்காய்கள், 12
மிளகாய்ப் பொடி, 200 கிராம்
கடுகுப் பொடி, 200 கிராம்
பொடிக்கல் உப்பு, 200 கிராம் (கல் உப்பை பொடித்துக் கொள்ளவும்)
வெந்தயம், 1 1/2 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய், 1/2 கிலோ

செய்முறை
வெந்தயத்தை சிவக்க வறுத்து, பொடித்துக் கொள்ளவும்.

மாங்காய்களை நன்றாக் அலம்பி, ஈரம் போக நன்கு துடைத்துக் கொள்ளவும்.

பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
(நடுவில் உள்ள மாங்கொட்டையை எடுத்து விடவும்.)

மாங்காய் துண்டுகளை ஒரு துணியில் பரத்தி, 1/2 மணி நேரம் காய விடவும்.

ஒரு சுத்தமான பெரிய தாம்பாளத்தில் வெந்தயப்பொடி, மிளகாய்ப் பொடி, க்டுகுப் பொடி, உப்பு ஆகியவற்றை கொட்டி ந்ன்கு கலந்து கொள்ளவும்.

ஒரு எவர்சில்வர் பாத்திரத்தில் (அல்லது பிளாஸ்டிக் டப்பாவில்) ஒரு கைப்பிடி மிளகாய்ப்பொடி கலவையை போடவும்.

அதன் மேல் ஒரு கைப்பிடி மாங்காய் துண்டுகளை போடவும்.

மிளகாய்பொடி கலவை, பின்னர் மாங்காய், பின்னர் மிளகாய் பொடி கலவை, அடுத்து மாங்காய் ----- என மாற்றி மாற்றி போடவும்.

கடைசியாக மேலே மிளகாய்ப் பொடி கலவை வருமாறு போடவும் (The top Layer shall NOT be mangoes, but spices mix)

மொத்தம் இருக்கும் 1/2 கிலோ நல்லெண்ணெயில், பாதி (1/4 கிலோ) எண்ணெயை ஊற்றி, பாத்திரத்தை மூடி வைக்கவும்.




ஒரு நாள் விட்டு அடுத்த நாள், நன்கு கிளறி விட்டு, மீதி (1/4 கிலோ) எண்ணெயையும் ஊற்றி, வேறு பாத்திரத்திற்கு (ஜாடி அல்லது pearlpet bottle) மாற்றவும்.

2-3 நாட்கள் கழித்து மீண்டும் நன்கு கிளறி விடவும்.

ஜாடியை அழுத்தி மூடி வைக்கவும். மூடிக்கு மேலே சுத்தமான மஸ்லின் துணியால் அழுத்தி மூடவும்.

தினப்படி உபயோகத்திற்கு கொஞ்சம் ஊறுகாயை ஒரு பாட்டிலில் போட்டு வைக்கவும்; ஜாடியை தினம் தினம் திறக்கக் கூடாது.

7 நாட்கள் கழித்து ஊறுகாயை பயன்படுத்தலாம்.


WITH POONDU




NO Poondu



ராஜப்பா
11:45 காலை 25 Feb 2010 ---- 9-5-2018

09-05-2018   URUGAI was ready
04-05-2018  URUGAI Preparation started
04-05-2018  Mango 2.5 kg (@100.00 a kg including cutting) purchased from South Mada Veedhi, Mylapore


No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...