மோர் மிளகாய்
நீளமான பச்சை மிளகாய்களை தேர்ந்தெடுக்கவும்.
நன்கு அலம்பி, துடைத்துக் கொள்ளவும்.
நீளவாக்கில் கீறவும் (காம்புடன்).
புளித்த தயிரில் (மோரில்) ஊற வைக்கவும்.
உப்பு போடவும்.
1/2 மூடி எலுமிச்சம் பழத்தை பிழியவும்.
24 மணி நேரம் ஊற வைக்கவும்.
மிளகாய்களை எடுத்து, நல்ல வெயிலில் ஒரு நாள் முழுதும் காய வைக்கவும்.
அடுத்த நாள் முழுதும் தயிரில் (முன்பு உபயோகித்த தயிர்) 24 மணி நேரம் ஊற வைக்கவும்.
அதற்கும் அடுத்த நாள் மிளகாய்களை நல்ல வெயிலில் காய விடவும்.
தயிர் - வெயில் என மாற்றி மாற்றி ஊற / காய விடவும்.
தயிர் முழுதும் தீர்ந்ததும் (3-4 நாட்களில்), வெயிலில் மட்டும் இன்னும் 5-6 தினங்களுக்கு காய விடவும்.
மோர் மிளகாய் தயார்.
ராஜப்பா
11:00 காலை
25-02-2010
Subscribe to:
Post Comments (Atom)
-
நம் வீடுகளில் (13ஆம் நாள் சுபஸ்யம்) க்ரேக்கியத்தன்றோ அல்லது சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு மறுநாள் செய்யும் ஸ்வாமி சமாராதனையன்று செய்யும் சமையலை...
-
நம் வீடுகளில் செய்யும் சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு பண்ண வேண்டிய சமையலை விவரமாக காண்போம். 5 சுமங்கலிகளையும், 1 கன்யாப் பெண்ணையும் அழைக்க வேண...
-
திருவாதிரை கூட்டு செய்ய பல காய்கறிகள் தேவைப்படுகின்றன - எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் போதும்; ஆனால் கடையில் கொஞ்சம் கேட்டால் கொடுப்பதில்லை ! என்ன ...
your blog is very much useful.Congrats and thanks for your effort.
ReplyDelete