மாங்காய் இனிப்பு ஊறுகாய்
தேவையான பொருட்கள்
மாங்காய் (medium size) 5 அல்லது 6
சர்க்கரை – 1 கிலோ
சீரகப் பொடி (வறுத்து அரைத்தது) – 1 டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி – 1/2 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்
செய்முறை
மாங்காயை தோல் சீவி துருவிக்கொள்ளவும்.
இதை ஒரு வாய் அகன்ற பெரிய பாத்திரத்தில் போட்டு, உப்பு, சர்க்கரை சேர்த்து, நன்றாக கலக்கவும்.
8 மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். நன்றாக த்ண்ணீர் விட்டுக்கொள்ளும்.
பாத்திரத்தை மறுநாள் காலையில் நல்ல வெயிலில் வைக்கவும். மெல்லிய துணியால் மூடி வைக்கலாம்.
6, 7 நாட்கள் இதுபோன்று தினமும் வெயிலில் வைத்து எடுத்தால், சர்க்கரை பாகு போல வந்து கெட்டியாகி விடும்.
அதில் சீரகப்பொடி, மிளகாய்ப் பொடி சேர்த்து, நன்கு கலந்து, பாட்டிலில் போட்டு உபயோகிக்கவும்.
விஜயா
25 மே 2008
11:25 AM
Subscribe to:
Post Comments (Atom)
DAHI BHINDI
DAHI BHINDI Ingredients ...
-
நம் வீடுகளில் (13ஆம் நாள் சுபஸ்யம்) க்ரேக்கியத்தன்றோ அல்லது சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு மறுநாள் செய்யும் ஸ்வாமி சமாராதனையன்று செய்யும் சமையலை...
-
நம் வீடுகளில் செய்யும் சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு பண்ண வேண்டிய சமையலை விவரமாக காண்போம். 5 சுமங்கலிகளையும், 1 கன்யாப் பெண்ணையும் அழைக்க வேண...
-
அது மாகாளியா, அல்லது மாகாணியா? பெயர் என்னவாயிருந்தால் என்ன, அது மலைப்பிரதேசங்களில் விளையும் ஒரு மரத்தின் வேர். கூகிளில் தேடியபோது, இந்தக் ...
No comments:
Post a Comment