- 1/2 கிலோ சேனைக்கிழங்கை அலம்பி, தோல் சீவி, மீண்டும் அலம்பி சின்ன சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.கிழங்கை மீண்டும் running waterல் அலம்பி, தண்ணீரை இருத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
- கொதித்த தண்ணீரில் கிழங்கு துண்டுகளை போட்டு 10 நிமிஷம் அதில் இருக்கட்டும்.
- தண்ணீரை வடித்து விட்டு கிழங்கை ஆறப் போடவும்.
- ஒரு பாத்திரத்தில் கீழ்க்கண்டவைகளை போடவும்:
- 2 டேபிள்ஸ்பூன் கடலை மாவு
- 2 டேஸ்பூன் அரிசி மாவு
- உப்பு 1 டீஸ்பூன்
- மிளகாய் பொடி 1 டீஸ்பூன்
- பெருங்காயம் சிட்டிகை
- மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
- இவற்றை நன்றாக கலந்து கொள்ளவும்.
- வாயகன்ற ஒரு பாத்திரத்தில் கிழங்கு துண்டங்களையும் மேற்சொன்ன கலவையையும் போட்டு, பிசறிக் கொள்ளவும். கிழங்கிலேயே தண்ணீர் இருக்குமாதலால் மறுபடியும் நீர் சேர்க்க வேண்டாம்.
- பத்து நிமிஷம் இருக்கட்டும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும், துண்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.
சேனைக்கிழங்கு வறுவல் ரெடி.
ராஜப்பா
15-06-2013
இன்று காலை நாங்கள் இதை செய்து சாப்பிட்டோம்.
No comments:
Post a Comment