11 January 2018

Vadai Curry

வடைகறி


பொருட்கள்

பருப்பு வடை – 10 (செய்முறை எழுதவில்லை)

வெங்காயம் -2 நறுக்கியது,
தக்காளி – 3,
பூண்டு – 8,
மிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள்,
இஞ்சி 1/2”,
பட்டை 1/2”,
ஏலக்காய் – 2,
கிராம்பு – 1,
பச்சை மிளகாய் – 2,
முந்திரி – 6,
வேர்க்கடலை – 10

விழுதாக அரைக்க:

1/2 வெங்காயம், தக்காளி, 4 பூண்டு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, பச்சைமிளகாய், முந்திரி, வேர்க்கடலை இவை யாவற்றையும் சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

METHOD

வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும், பிரிஞ்சி இலை, மீதி வெங்காயம், தக்காளி, 4 முழுப் பூண்டு இவைகளை வதக்கவும்.

அரைத்த மசாலா விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, சிறிது தண்ணீரில் வேகவிடவும். தேங்காய்ப் பாலும் சேர்க்கலாம்.

க்ரேவி நன்கு வந்தவுடன், வடைகளை சிறிதாக பிய்த்து அதில் போடவும்.

வடைகள் க்ரேவியுடன் ஊறும் வரை குறைந்த தீயில் வைக்கவும்.

கொத்துமல்லி தழை போட்டு இறக்கவும்.

இட்லி, தோசையுடன் சாப்பிட வடைகறி சிறந்தது.

ராஜப்பா
11-10-2006
18:50 மணி

No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...