13 January 2018

கோவைக்காய் கறி

கோவைக்காய் கறி


கோவைக்காய்      --- 750 கிராம்

எண்ணெய்     ---- 4 (அ) 5 டேபிள்ஸ்பூன்

மஞ்சள் பொடி ---- 1/2 டீஸ்பூன்

மிளகாய் பொடி ---- 1 டீஸ்பூன்

கத்தரிக்காய் கறி பொடி - 2 டேபிள்ஸ்பூன்

கடுகு ----- தாளிக்க

உப்பு ---- 1 டீஸ்பூன்

KATHTHARIKKAI CURRY POWDER.

Coriander seed - 1/4 cup

Venthayam - 1/4 tsp

Vara Milakai (red) - 15

Garama masala powder - 1 tsp

Kadalai Paruppu - 2 tbsp

METHOD:

Fry each spice separately in a little ghee.

Powder together.

கோவைக்காயை நன்றாக அலம்பிக் கொள்ளவும்.

இரண்டு நுனிகளையும் நறுக்கி விட்டு, காயை நீள வாட்டத்திலேயோ, வில்லை வில்லையாகவோ நறுக்கவும்

சிறிது தண்ணீர் தெளித்து, மைக்ரோ ஓவனில் வைத்து 10 - 12 நிமிஷம் வேகவிடவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு தாளிக்கவும்.

கடுகு வெடித்தவுடன், வேகவைத்த காயை போடவும்.

மீதியுள்ள எண்ணெயை ஊற்றவும்.

உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து, வாணலியை மூடி, 15 நிமிஷம் வேக விடவும்.

10 நிமிஷங்கள் வெந்த பிறகு, மிளகாய் பொடி மற்றும் கறிப் பொடி இரண்டையும் போடவும்.

நன்றாக கலக்கவும்.

வாணலியை மீண்டும் மூடி, இன்னும் 5 - 6 நிமிஷங்கள் வேக விடவும்.
                   கோவைக்காய் நிறைய மருத்துவ குணங்கள் நிரம்பியது.

Rajappa
2-8-2014   13-01-2018








No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...