13 January 2018

PUNJABI ALOO.

PUNJABI ALOO

நேற்றிரவு நான் இதை செய்தேன். செய்முறையை அப்படியே follow செய்தாலும் சிலவற்றை கொஞ்சம் கொஞ்சம் மாற்றி செய்தேன்.கீழே பச்சை நிறத்தில் உள்ளவை நான் செய்த மாறுதல்கள்.

தேவையானவை:

உருளைக்கிழங்கு மீடியம் சைஸ் - 4 அல் 5
வெங்காயம் -- 2
பச்சை மிளகாய் -- 3  (4)
பூண்டு -- 15
இஞ்சி -- சிறு துண்டம் (தோல் நீக்கவும்)
தக்காளிப் பழம் --- 4 மீடியத்திற்கும் கொஞ்சம் சின்னது
கரம் மசாலா -- 1 டீஸ்பூன்
ஜீரகம் --- 2 டீஸ்பூன்
எண்ணெய் --- 3 அல் 4 டேபிள்ஸ்பூன்
உப்பு -- தேவையான அளவு.
கொத்தமல்லி தழை --- கொஞ்சம்.

செய்முறை.

பிரஷர் குக்கரில் உருளைக் கிழங்கை போட்டு வேகவிடவும். அதுவே ஆறட்டும்.

வெங்காயத்தை தோல் உரித்து, பொடியாக நறுக்கவும்

பூண்டு தோல் உரிக்கவும்; இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கவும்.

மூன்று மிளகாய்களை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு தக்காளி பழத்தை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். தனியாக ஒரு கிண்ணத்தில் ஊற்றி வைக்கவும்.

பூண்டு, இஞ்சி, ஒரு ப.மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

மற்ற 3 தக்காளி பழங்களை பொடியாக நறுக்கி வைக்கவும்.

ஆறியபிறகு, குக்கரை திறந்து, கிழங்குகளை தோல் உரித்து, சிறு துண்டங்களாக small cubes  நறுக்கவும் (கையாலேயே பண்ணி விடலாம்)

வாணலியில் 2 டே.ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் ஜீரகம் போட்டு தாளிக்கவும்.

பொடித்த வெங்காயம் போட்டு 5-6 நிமிஷம் வதக்கவும்.

அரைத்த பூண்டு-இஞ்சி-மிளகாய் விழுதை போட்டு 5 நிமிஷம் வதக்கவும்.

பின்னர், உப்பு, தக்காளி ஜூஸ், தக்காளிப் பழம் நறுக்கிய துண்டங்கள் போடவும். 6 நிமிஷம் வரை (பச்சை வாசனை போகும்வரை) வதக்கவும். வேண்டுமானால் கொஞ்சம் எண்ணெய் விடலாம்.

கரம் மசாலா போடவும்.

உ.கிழங்கு துண்டுகளை போட்டு மெதுவாக, நன்கு கலக்கவும்.

2 அல்லது 3 சிறு தம்ளரில் தண்ணீர் ஊற்றவும்.

10-12 நிமிஷம் கொதித்த பின்னர் அடுப்பை அணைத்து விடலாம்.

கொத்துமல்லி தழை போடவும்.

பஞ்சாபி ஆலு ரெடி.


சப்பாத்தி, தோசை இவற்றிற்கு தொட்டுக் கொள்ளவோ, சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடவோ செய்யலாம். Very tasty.

ராஜப்பா
11-08-2012
10:00 காலை.

No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...