11 January 2018

PAGARKAI VARUVAL


PAGARKAI  VARUVAL

பாகற்காய் - ஒன்று

கடலை மாவு - ஒரு மேசைக்கரண்டி

அரிசி மாவு - 1 அல்லது 1 1/2 மேசைக்கரண்டி

உப்பு

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

புளிக்கரைசல் / எலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் – தேவைக்கு

பாகற்காயை சுத்தம் செய்து வட்ட வட்டமாக நறுக்கி வைக்கவும்.

இதில் மாவு, தூள் எல்லாம் சேர்த்து பிரட்டவும்.

பின் எலுமிச்சை சாறு அல்லது புளிக்கரைசல் சேர்த்து பிரட்டவும்.

தேவைக்கு சிறிது நீர் சேர்க்கலாம், நீர்த்து விட கூடாது, மாவு காயில் ஒட்டும் பதத்தில் இருந்தால் போதும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொரித்து எடுக்கவும்.

பொரிக்கும் போது உடன் சிறிது கறிவேப்பிலை சேர்த்து பொரித்தால் மணமாக இருக்கும்.

கலவை பாகற்காயில் ஒன்றுபோல் கலக்குமா என சந்தேகம் இருந்தால் மாவு, தூள் எல்லாம் ஒன்றாக கலந்து விட்டு பின் பாகற்காயை பிரட்டி வைக்கலாம்.

விரும்பினால் அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கலாம்.

Rajappa
17-07-2014

No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...