11 January 2018

Aloo Dhum

ALOO DHUM


பொருட்கள்

சின்ன உருளை – 4, தக்காளி – 2, வரமிளகாய் – 4, வெங்காயம் – 1

இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், பொடித்த ஏலக்காய், கிராம்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் – 1/2 டீஸ்பூன் தலா

உப்பு, எண்ணெய்

செய்முறை

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கை உப்பு, மஞ்சள் சேர்த்து வேகவைத்து, தோல் உரித்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, வரமிளகாயுடன் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

வெந்த உ.கிழங்கில் FORK கொண்டு துளையிடவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, இஞ்சி பூண்டு விழுது, ஏலக்காய், கிராம்பு போட்டு வதக்கவும்.

மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, அதில் அரைத்த விழுதை போட்டுக் கிளறவும்.

வெந்த உ.கிழங்கை போட்டு வதக்கவும்.

தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கவும்.

நன்றாக கொதித்ததும் கொத்துமல்லி போட்டு இறக்கவும்

ராஜப்பா
25-01-2009, 17:50 மணி
** நன்றி: ஆனந்தவிகடன், 28-01-2009 இதழிலிருந்து

No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...