1 சாதா கறி
வாழைக்காயை தோல் சீவி, துண்டங்களாக நறுக்கி, புளித்தண்ணீரில் போட்டு கொதிக்கவிடவும்.
உப்பு, சிறிது மஞ்சள் தூள் போடவும்.
வெந்ததும் எடுத்து வடிய வைக்கவும். வாணலியில் 4-5 ஸ்பூன் எண்ணெய் விட்டு, 1/2 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, 3 அல்லது 4 மிளகாய் வற்றல்கள் (இரண்டு மூன்றாக கிள்ளிக் கொள்ளவும்) இவைகளை தாளித்து, வாழைக்காய்களைப் போட்டு, பெருங்காயத்தை கரைத்து ஊற்றவும். அடுப்பை ஸிம்மில் வைத்து வதக்கி எடுக்கவும்.
(மீனாக்ஷி அம்மாள், பகுதி 01)
வாழைக்காய் சாதா கறி
(இது நான் செய்வது, விஜயாவின் மேற்பார்வையில்)
வாழைக்காயை தோல் சீவி, துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். வாழைக்காயை எப்போதும் தண்ணீரில் போட வேண்டும், இல்லாவிட்டால் கறுத்துவிடும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும், கடுகு, கடலைப்பருப்பு, சீரகம் தாளிக்கவும். சிட்டிகை பெருங்காயம் போடவும்.
காயைப் போட்டு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் போடவும்.
சிறிது தண்ணீர் தெளித்து, காயை வதக்கவும்.
I made it on 21-02-2018
கறி ரெடி.
வாழைக்காய் கறி - ஸ்ராத்த சமையல்
வாழைக்காய்களை தோல் சீவி, துண்டங்களாக் நறுக்கிக் கொண்டு, தண்ணீரில் போடவும். கொஞ்சம் உப்பு போட்டு தண்ணீரில் வேக வைத்துக் கொள்ளவும். பாதி வெந்தால் கூட போதும். தண்ணீரை இறுத்து விடவும்.
உளுத்தம்பருப்பு, மிளகு, வரமிளகாய் ஆகியவற்றை (எண்ணெயோ, தண்ணீரோ விடாமல்) வறுத்து பொடித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, வெந்த வாழைக்காயை போடவும். அரைத்த பொடியையும் போடவும்.
காய் வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
பருப்பு அரைத்த கறியாகவும், பொடி தூவிய கறியாகவும் செய்யலாம்.
Rajappa 24-05-2018
I prepared it on 24-05-2018
No comments:
Post a Comment