Showing posts with label Poondu Rasam. Show all posts
Showing posts with label Poondu Rasam. Show all posts

02 February 2018

பூண்டு ரசம்

பூண்டு ரசம்

பூண்டு, உரித்தது 50 பல்
தனியா,1 டீஸ்பூன்
துவரம்பருப்பு, 1/2 டீஸ்பூன்
மிளகு, 1/2 டீஸ்பூன்
ஜீரகம், 1/2 டீஸ்பூன்
வர மிளகாய் (சிகப்பு), 3
புளி, எலுமிச்சம் பழ அளவு
நெய், 1 டீஸ்பூன்
உப்பு

செய்முறை

தனியா தொடங்கி வரமிளகாய் வரை 1 டீஸ்பூன் நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.

4, 5 பூண்டு பற்களையும் சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.

கொஞ்சம் தண்ணீர் விட்டு மிக்சியில் விழுதாக அரைக்கவும்.

புளித்தண்ணீரில் மிச்சமுள்ள பூண்டுகளைப் போட்டு, உப்பு சேர்த்து நன்கு வேக விடவும்.

அரைத்து விட்ட விழுதை தண்ணீரில் நன்கு கரைத்துக் கொண்டு, இதில் சேர்த்து ஒரு கொதி வந்ததும், அணைத்து விடவும்.

நெய்யில் கடுகு தாளித்து கொட்டவும்.


Poondu Rasam  24-02-2018


ராஜப்பா
5:30 

Poondu RASAM prepared by me 12 noon on 3-6-2018

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...