Showing posts with label Ennai Kaththarikkai. Show all posts
Showing posts with label Ennai Kaththarikkai. Show all posts

11 January 2018

Ennai Kaththarikkai

ENNAI KATHTHARIKKAI - 

இது ஒரு நீளமானக் குறிப்பு - பொறுமை தேவை.

தேவையான சாமான்கள்

முதலில், வயலெட் நிறத்தில் கிடைக்கும் கத்தரிக்காய்களை மிகச் சிறிய சைஸில், பிஞ்சாக, இளசாக பார்த்து, பொறுக்கி வாங்கிக் கொள்ளவும்.

# அ. வறுத்து அரைக்க:  (for stuffing)

வெள்ளை எள், 3 டேஸ்பூன் (டேபிள் ஸ்பூன்)
கசகசா, 1 டேஸ்பூன்
மிளகு, ஜீரகம், 1/2 டீஸ்பூன் ஒவ்வொன்றும்
தனியா, 4 டேஸ்பூன்
கடலைப் பருப்பு, 1 டேஸ்பூன்
வர மிளகாய், 10
தேங்காய் துருவல், 1/2 மூடி

# ஆ. தாளிக்க:

எண்ணெய், 8 டேபிள் ஸ்பூன் (நல்லெண்ணெய் பாதி, மற்ற சமையல் எண்ணெய் பாதி)
கடுகு, ஜீரகம், மிளகு, 1/2 டீஸ்பூன் ஒவ்வொன்றும்.
கறிவேப்பிலை, கொஞ்சம்

# இ. மற்றவை:

சிறிய சைஸ் கத்தரிக்காய், 1 கிலோ
பெரிய வெங்காயம்,2, நறுக்கியது
தக்காளிப் பழம், 2, நறுக்கியது
சின்ன வெங்காயம், 15-20
பூண்டு, 15-20 பல்
புளி, 1 எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள், 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள், 2 டீஸ்பூன்
வெல்லம், கொஞ்சம்
உப்பு, தேவையான அளவு,

செய்முறை.

பகுதி # 1.
கத்தரிக்காய்களை நன்கு அலம்பி, 4-ஆக பிளந்து கொள்ளவும் (Slit only). தண்ணீரில் போட்டு வைக்கவும்.
முக்கிய குறிப்புகள்: முழுசாக நறுக்கி விடாதீர்கள். Only slitting. காய்களின் காம்புகளை நறுக்கி விடாதீர்கள்.

பகுதி # 2:
வாணலியை சூடு பண்ணி, முதலில் வெள்ளை எள், அடுத்து கசகசா என தனித்தனியாக வறுத்துக் கொண்டு, ஒரு தட்டில் போடவும்.

பின்னர், மிளகு, ஜீரகம், கடலைப்பருப்பு, தனியா. வர மிளகாய், ஆகியவற்றை ஒன்றாக வறுத்து, தட்டில் போட்டுக் கொள்ளவும்.

கடைசியில், தேங்காய் துருவலை வறுத்து, தட்டில் போடவும்.

ஆற விடவும். ஆறிய பின், மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும்.


அடுத்து, மிக்ஸியில் இந்தப் பொடியுடன் சின்ன வெங்காயம், பூண்டு, சிறிது உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

இந்த விழுதில் 1/3 பகுதியை தனியாக வைத்துக் கொள்ளவும்.

மீதி விழுதை கத்தரிக்காய்களில் நிரப்பவும். (Stuff inside)

பகுதி # 3:

வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு, சூடானதும், நறுக்கிய (பெரிய) வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

நறுக்கிய தக்காளிப்பழங்களை மிக்ஸியில் போட்டு, அரைத்து, இந்த வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவும்.

மஞ்சள் தூள், மிளகாய் தூள்,சிறிது உப்பு சேர்க்கவும்.

5 நிமிஷங்கள் வதங்கியவுடன், இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும்.

பகுதி # 4:

வாணலியில் நிறைய எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, ஜீரகம், மிளகு தாளிக்கவும்.

கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

Stuff செய்த கத்தரிக்காய்களை இதில் போட்டு வதங்க விடவும். வாணலியை மூடி விடவும்.

சுமார் 1/2 மணி நேரம் வதங்க வேண்டும் (ஸிம்மில் வைக்கவும்)

பகுதி # 5:

புளியைக் கரைத்து இதில் ஊற்றவும்.

தனியாக வைத்த விழுதை சேர்க்கவும்.

வெங்காயம் - தக்காளி வதக்கலை சேர்க்கவும்.

தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

நன்கு கொதிக்க வேண்டும் - தேவையானால், தண்ணீர் / எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஸிம்மில் 1/2 மணி நேரம் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வர வேண்டும்.

எண்ணெய் கத்தரிக்காய் ரெடி.

வெள்ளை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.
புலவ் / பிரியாணியுடன் தொட்டுக் கொள்ளலாம்.
சப்பாத்தி / புல்காவுடன் தொட்டுக் கொள்ளலாம்.

ராஜப்பா
11:30 மணி
16-05-2011

குறிப்பு: நேற்று, ஞாயிறு 15-05-2011 அன்று பகல் உணவிற்கு இதை நான் செய்தேன். கிட்டத்தட்ட 2 1/4 மணி நேரம் ஆயிற்று. அதிதி உட்பட எல்லாரும் ரசித்து, சுவைத்து சாப்பிட்டனர்.

கத்தரிக்காய் அளவு 1 கிலோ இல்லாமல் 1/4 கிலோ, 1/2 கிலோ என இருந்தால் அதற்கு ஏற்றாப் போலே மற்ற சாமான்களையும் குறைத்துக் கொள்ளவும்.

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...