பொரிச்ச கூட்டு / குழம்பு
பொரிச்ச குழம்பு என்றால் ஒரு காய் மட்டும் போட்டு செய்வது. கூட்டு என்றால் பல காய்கள் ஒன்றாக போட்டு செய்வது.
முருங்கை, சௌசௌ, காரட் இவைகளை துண்டங்களாக நறுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும். மஞ்சள் பொடி, உப்பு, பெருங்காயம் போடவும். Let it boil.
பயத்தம் பருப்பை நன்கு குழைய வேக விடவும். காய்கள் நன்றாக கொதித்து, வெந்த பிறகு, பயத்தம் பருப்பை அதில் சேர்த்து, கொதிக்க விடவும்.
தாளிக்கும் பாத்திரத்தில், தேங்காய் எண்ணெய் (ஆமாம் தேங்காய் எண்ணெய்) ஊற்றி நன்றாக சுட்டவுடன், அதில் மிளகு 2 டீஸ்பூன் போட்டு, வெடிக்க விடவும். வெடித்தவுடன், ஒரே ஒரு மிளகாய் (சிவப்பு), மற்றும் உளுத்தம் பருப்பு சேர்க்கவும். கீழே இறக்கி, பச்சை ஜீரகம், தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன், சேர்க்கவும். மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து, கொதிக்கும் காய்களில் போடவும்.
தாளிக்கும் பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் (ஆமாம் தேங்காய் எண்ணெய் தான்), ஊற்றி, கடுகு தாளிக்கவும். இதையும் கொதிக்கும் காய்களில் தாளிக்கவும்
.
அடுப்பை அணைக்கலாம். பொரிச்ச கூட்டு ரெடி.
12-6-2018
Showing posts with label Poriccha Koottu. Show all posts
Showing posts with label Poriccha Koottu. Show all posts
Subscribe to:
Posts (Atom)
-
நம் வீடுகளில் (13ஆம் நாள் சுபஸ்யம்) க்ரேக்கியத்தன்றோ அல்லது சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு மறுநாள் செய்யும் ஸ்வாமி சமாராதனையன்று செய்யும் சமையலை...
-
திருவாதிரை கூட்டு செய்ய பல காய்கறிகள் தேவைப்படுகின்றன - எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் போதும்; ஆனால் கடையில் கொஞ்சம் கேட்டால் கொடுப்பதில்லை ! என்ன ...
-
நம் வீடுகளில் செய்யும் சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு பண்ண வேண்டிய சமையலை விவரமாக காண்போம். 5 சுமங்கலிகளையும், 1 கன்யாப் பெண்ணையும் அழைக்க வேண...