Showing posts with label Birinji Saadam. Show all posts
Showing posts with label Birinji Saadam. Show all posts

04 April 2018

பிரிஞ்சி சாதம்

பிரிஞ்சி சாதம்.

தேவையான பொருட்கள்:


பச்சரிசி - 2 கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளிப் பழம் - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பூண்டு - 8 பல்
பச்சை பட்டாணி - 1/4 கப்
காரட் - 1
பீன்ஸ் - 4
உருளைக் கிழங்கு - 1
காலிபிளவர் துண்டுகள் - 1/2 கப்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
நெய் அல்லது எண்ணெய் - 8 டேபிள்ஸ்பூன்
பட்டை இலை - சிறிது Bayleaf
கிராம்பு - 4
பட்டை - 3 துண்டுகள்
உப்பு - தேவைக்கேற்றவாறு
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
கொத்துமல்லித் தழை - சிறிது

செய்முறை:

அரிசியைக் கழுவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாயை நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

தக்காளி, பூண்டு, இஞ்சி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

காய்கறிகளையும் மீடியமாக நறுக்கிக் கொள்ளவும்.

குக்கரை அடுப்பிலேற்றி நெய் அல்லது எண்ணெயை விட்டு சூடானதும் அதில் பட்டை இலை, பட்டை, கிராம்பு சேர்த்து சற்று சிவந்ததும் அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அதில் தக்காளித் துண்டுகளைப் போட்டு வதக்கவும். அத்துடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டுக் கிளறி விடவும்.

பின் அதில் நறுக்கி வைத்துள்ள காய், பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து கிளறி, பின்னர் அதில் ஊற வைத்துள்ள அரிசியை, தண்ணீரை வடித்து விட்டு சேர்க்கவும். அரிசி நன்றாக, தொட்டால் சுடும் வரைக் கிளறி விடவும். அத்துடன் 4 கப் தண்ணீர், எலுமிச்சை சாறு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி மூடி வைத்து, இரண்டு விசில் வரும் வரை வேக விடவும்.

குக்கர் ஆறியவுடன், திறந்து கொத்துமல்லித் தழையைத் தூவி பரிமாறவும்.

குறிப்பு: இதை பாசுமதி அரிசியிலும் செய்யலாம். பாசுமதி அரிசி உப்யோகித்தால், தண்ணீரின் அளவை 3 கப்பாக குறைத்துக் கொள்ளவும். தண்ணீருக்குப் பதில் தேங்காய் பால் உபயோகித்தும் செய்யலாம்.

காய்கறிகள் இல்லாமல் வெறும் பிரிஞ்சி சாதமாகவும் செய்யலாம். மசாலா வாசனை கூடுதலாக வேண்டுமென்றால், 1/2 டீஸ்பூன் கரம் மசாலாத்தூளைச் சேர்க்கலாம்.

ராஜப்பா
01-07-2012
பகல் 12:45 மணி

முக்கிய குறிப்பு:
இன்று 01-07-2012 எழுதிய 4 போஸ்ட்டுகளுக்கும் “அடுப்பங்கரை” Blogகிற்கு எனது நன்றிகள் பல.

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...