Showing posts with label Semiya. Show all posts
Showing posts with label Semiya. Show all posts

04 December 2017

உப்புமா வகைகள்

உப்புமா வகைகள்

1. அரிசி உப்புமா
200 கிராம் அரிசி, 2 டீஸ்பூன் துவரம்பருப்பு இவற்றை சிறிது தண்ணீர் தெளித்து, 30 நிமிடங்கள் பிசறி வைக்கவும். பின்னர் மிக்சியில் போட்டு ரவை மாதிரி உடைத்துக் கொள்ளவும்.

#2. தாளிக்க
ஒரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், கடுகு, கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, சின்ன துண்டு இஞ்சி, இரண்டு பச்சைமிளகாய் (நறுக்கியது), கறிவேப்பிலை, பெருங்காயம், இவற்றைப் போட்டுத் தாளிக்கவும்.

ஒரு பங்கு அரிசிக்கு மூன்று பங்கு தண்ணீரை வாணலியில் விட்டு, உப்பு போட்டு கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்தவுடன் அரிசி போட்டு கிளறவும். அடுப்பை குறைந்த தீயில் (ஸிம்) வைக்கவும். வாணலியை மூடி வைக்கவும். 7-8 நிமிஷத்தில் உப்புமா தயார்.

2. ரவா உப்புமா (பாம்பே ரவா)
200 கிராம் ரவையை சுமாராக (வாசனை வரும்வரை) வறுத்துக் கொள்ளவும்.

மேலே சொன்ன (#2) மாதிரியே தாளித்துக் கொள்ளவும். தாளித்த பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை இதில் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், ஒரு பங்கு ரவைக்கு இரண்டு பங்கு தண்ணீர் விட்டு, உப்பு போட்டு, கொதி வந்ததும், வறுத்த ரவையை போட்டுக் கிளறவும்.

3. சேமியா உப்புமா
200 கிராம் சேமியாவை மேலே சொன்ன பாம்பே ரவைக்குப் பதிலாக உபயோகிக்கவும்.  மற்ற எல்லா செய்முறைகளும் அஃதே.

4. கோதுமை ரவை உப்புமா.
செய்முறை அஃதே. பாம்பே ரவை உப்புமா மாதிரியே செய்யவும். கறிகாய்களுடன் இது 60 கிராம் கார்போஹைட்ரேட், 10 கிராம் புரோட்டீன், 4.5 கிராம் கொழுப்பு தரும்; 325 கலோரி.

 பாம்பே ரவா, சேமியா, கோதுமை ரவா உப்புமாக்கள் செய்யும்போது, பீன்ஸ், காரட், பட்டாணி, உருளைக்கிழங்கு சின்ன வெங்காயம் ஆகிய கறிகாய்களை சேர்த்து செய்யலாம்.

5. அவல் உப்புமா
கெட்டி அவல், 200 கிராம்
உருளைக்கிழங்கு, பெரியது 1
வெங்காயம், பெரியது 1
வேர்க்கடலை, 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய், 2
இஞ்சி, 1 செமீ துண்டு
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு (தாளிக்க)
எண்ணெய், 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் பொடி, உப்பு
எலுமிச்சம் பழம், 1
கொத்துமல்லி தழை, சிறிது

செய்முறை
அவலை தண்ணீரில் அலம்பி, தண்ணீரைக் கொட்டி விடவும்.
புதிய தண்ணீரில் அவலை 5 நிமிஷம் ஊறவைக்கவும்.
தண்ணீரை கொட்டிவிடவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
வேர்க்கடலையை வறுக்கவும்.

பச்சைமிளகாய், இஞ்சி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

ஊறவைத்த அவலை இதில் போட்டு, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கிளறவும். 4 நிமிஷம் மூடி வைக்கவும்.

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கிக் கொள்ளவும்.
கிழங்கை உதிர்த்து, அவல் மேல் தூவவும்.

பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தழை போடவும்.

அடுப்பை அணைத்து விட்டு ஒரு மூடி எலுமிச்சம் பழத்தின்  சாறு பிழியவும்.

6. ஜவ்வரிசி உப்புமா (SABUDHANA KICHCHADI)

ஜவ்வரிசி - 200 கிராம்
உருளைக்கிழங்கு, பெரியது 1
வெங்காயம், பெரியது 1
வேர்க்கடலை, 50 கிராம்
பச்சை மிளகாய், 2
இஞ்சி, 1 செமீ துண்டு
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு (தாளிக்க)
எண்ணெய், 2 டேபிள்ஸ்பூன்
உப்பு
கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது, 1/2 கப்

செய்முறை
ஜவ்வரிசியை தண்ணீரில் 1 மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை கொட்டிவிடவும்.

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி, மசித்துக் கொள்ளவும்.

வேர்க்கடலையை கொஞ்சம் வறுத்துக் கொண்டு, தோல் நீக்கி, ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளித்துக் கொள்ளவும்.

பச்சைமிளகாய், இஞ்சி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும்.

ஊறவைத்த ஜவ்வரிசியைப் போட்டு, உப்பு சேர்த்து, நன்கு கிளறவும்.

குறைந்த தீயில் (வாணலியை) 5 நிமிஷம் மூடி வைக்கவும்.

ஜவ்வரிசி TRANSPARENT ஆக மாறியதும், உதிர்த்த உருளை, வேர்க்கடலை, பச்சைக் கொத்தமல்லி ஆகியவற்றைத் தூவி, அடுப்பை அணைக்கவும்.

ராஜப்பா
23-02-2010
11:15 AM

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...