Showing posts with label Soya flour. Show all posts
Showing posts with label Soya flour. Show all posts

25 November 2017

CHILLI, CRISPY BABY CORN (fry)

பெங்களூரில் Maakan Bhog என்னும் ரெஸ்டாரெண்டில் டிஸம்பர் மாஸம் இதை சாப்பிட்டோம். மிகவும் ருசியாக இருந்தது.  செய்முறையை தெரிந்துகொண்டு, நேற்று (06 ஜனவரி 2010) மாலை நான் வீட்டில் செய்தேன். நன்றாக வந்தது. அதிதி முதற்கொண்டு எல்லாரும் ரசித்து, ருசித்து சாப்பிட்டனர்.

தேவையானவை:

250 கிராம் baby corn
குடமிளகாய் பெரிய சைஸ், 1
வெங்காயம், 2
தக்காளிப்பழம், 1
2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
2 டேபிள்ஸ்பூன் பூண்டு, இஞ்சி விழுது
2 டேபிள்ஸ்பூன் தக்காளி சாஸ் (tomato sauce)
4 டேபிள்ஸ்பூன் சோள மாவு (Corn flour)
1 டீஸ்பூன் சோயா சாஸ் (Soya sauce)
2 டீஸ்பூன் மிளகாய் தூள்
வெண்ணெய், 10 கிராம் (optional)
உப்பு

செய்முறை

பேபிகார்னை 4 செமீ நீளத்திற்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

சோளமாவு, 1 டே.ஸ்பூன் பூண்டு-இஞ்சி விழுது, மிளகாய்த்தூள், கொஞ்சம் உப்பு இவைகளுடன் பேபிகார்ன் துண்டுகளை நன்கு பிசறி வைக்கவும்.

கொஞ்சம் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம். 10 நிமிஷம் வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், மீதமுள்ள 1 டே.ஸ்பூன் பூண்டு-இஞ்சி விழுது, வெங்காயம் (நீளவாக்கில் நறுக்கியது) போட்டு வதக்கவும்.

தக்காளியை நறுக்கி  இதில் போட்டு வதக்கவும்.

குடமிளகாயையும் நீள வாக்கில் நறுக்கி, இதில் போட்டு வதக்கவும்.

4-5 நிமிஷங்கள் வதங்கியதும், தக்காளி சாஸ், சோயா சாஸ், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து 4 நிமிஷங்கள் வதக்கவும்.

இன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு, (இத்தோடு வெண்ணெயையும் சேர்க்கலாம், வாசனைக்கு) நன்றாக சூடானதும்,பிசறி வைத்துள்ள பேபிகார்ன் துண்டங்களை போட்டு மொறுமொறுவென்று பொன்னிறமாக பொரிக்கவும்.

பொரித்த துண்டங்களை க்ரேவியில் சேர்த்து, இன்னும் 5 நிமிஷங்கள் வதக்கவும்.

Chilli, Crispy Baby corn Ready ! சூடாகப் பரிமாறவும்.

rajappa
7-1-2010


DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...